தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தோள்பட்டை வலி இதய நோயின் அறிகுறியா?

தோள்பட்டை வலி இதய நோயின் அறிகுறியா?

தோள்பட்டை வலி இதய நோயின் அறிகுறியா?


PUBLISHED ON : டிச 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும் 'ஷோல்டர் இப்பிஞ்மென்ட்' பிரச்னை இருப்பவர்களுக்கு, தோள் மூட்டு நுண்துளை சிகிச்சை செய்தால் நிவாரணம் கிடைக்குமா?வலி குறைந்து, இயல்பான பணியை செய்ய முடியுமா?

தோள் மூட்டில் உள்ள நீர் சுரப்பியில் புண் ஏற்படுவதால், வலி வருகிறது. இந்த சிகிச்சையில், புண் குணமாகி விடும். இந்த பிரச்னை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை செய்யப்படும். சிகிச்சை செய்த ஆறு - 10 வாரங்களில், கரும் பலகையில் எழுதுவது உட்பட, அனைத்து வேலைகளையும் செய்யலாம். வலி வராது.

ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு பிரச்னைகளுடன் இதய நோயும் இருந்தால், தோள் பட்டை வலி வருமா?

தோள் பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயம், கழுத்தில் பிரச்னை இருந்தாலும், தோள்பட்டையில் வலியை உணர முடியும். தோள் மூட்டுகளில் ஏற்படும் நோயால், வலி உண்டாகும் போது, தோள் மூட்டுகளை மெதுவாக அசைத்தாலே வலி இருக்கும். என்ன காரணத்தினால் பிரச்னை உள்ளது என்பதை, மருத்துவ ஆலோசனையில் உறுதி செய்து கொள்வது நல்லது.

தோள்மூட்டுகளில் உள்ள சுற்றுப் பட்டை தசை கிழிந்து மூட்டு தேய்மானம் இருந்தால், 'ரிவர்ஸ் ஷோல்டர் ரீபிளேஸ்மென்ட்' என்ற சிகிச்சை சிபாரிசு செய்கின்றனர். இதனை செய்தால் வலி நீங்கி மூட்டுகளில் அசைவு வருமா?

இந்த சிகிச்சையில் தேய்மானம் அடைந்த மூட்டுகளை அகற்றி, பந்து கிண்ணம் மூட்டான தோள் மூட்டில் செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. தசைகளின் இறுக்கத்தை சீரமைத்து இயங்கச் செய்வதால், மூட்டின் அசைவு நன்றாக இருக்கும். இந்த சிகிச்சையின் வெற்றி விகிதம், 95 சதவீதத்திற்கும் மேல். தாராளமாக செய்யலாம்.

பேருந்தில் பயணம் செய்யும் பலருக்கும் ஏற்படும் பிரச்னை, பேருந்தின் மேலிருக்கும் கம்பிகளை பிடித்து பயணம் செய்யும் போது, எதிர்பாராமல் போடும் பிரேக்கில் தோள் மூட்டு பிடித்துக் கொள்கிறது. தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. 'பிசியோதெரபி' செய்யலாமா? வேறு ஏதேனும் சிகிச்சை இதற்கு உள்ளதா?

தோள் மூட்டின் கிண்ணம் பகுதியில் உள்ள விளிம்பின் குருத்தெலும்பில் கிழிந்திருக்கிறது. தோள் மூட்டு விலகினால் ஏற்படும் பிரச்னை இது. தோள் மூட்டு நுண்துளை சிகிச்சையில், கிழிந்த குருத்தெலும்பை சரி செய்தால் வலி நீங்கி விடும்.

தோள் மூட்டுகளின் சுற்றுப் பட்டை தசை கிழிந்தைருந்தால், 'வெயிட்' துாக்கலாமா?

பிரச்னை இருக்கும் போது, பைகள் அல்லது வேறு எந்த பொருளையும் துாக்குவது தவறு. தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டும். மூன்று மாதங்களில் முன்னேற்றம் தெரியாவிட்டால், மூட்டு நுண்துளை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

அடிக்கடி தோள் மூட்டு விலகும் பிரச்னை இருப்பவர்களுக்க என்ன தீர்வு உள்ளது?

தோள் மூட்டின் பந்து பகுதியின் பின்புறத்தில் பள்ளம் ஏற்பட்டாலோ, தோள் மூட்டின் கிண்ணம் பகுதியில் குருத்தெலும்பில் கிழிசல் ஏற்பட்டாலோ இந்தப் பிரச்னை வரும்.இந்தப் பிரச்னையை, மேல் பகுதியில் உள்ள தசையை வைத்து அடைப்பதற்கு, நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.

பளு துாக்கும் பயிற்சி செய்பவர்களுக்கு, அதிக எடை துாக்குவதால், தோள் பட்டையில் உள்ள 'பைசெப்ஸ்' என்னும் தசை நார் அறுந்து விடும் பிரச்னை பொதுவாக ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை உள்ளதா?

இந்த தசை பளு துாக்குவதற்கு தேவைப்படும் முக்கியமான தசை. இதற்கு நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சைக்கு பின், முறையாக பிசியோதெரபி செய்தால், பளு துாக்கும் போட்டியில் வெற்றி பெறும் அளவிற்கு, இந்த தசை நார்கள் வலிமை பெற்று விடும்.

டாக்டர் கே.என்.சுப்ரமணியன்வேல்

சிறப்பு எலும்பியல் மையம்,

மதுரை93442 46436

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us