PUBLISHED ON : நவ 05, 2017

உடல் உழைப்பிற்கு, எவ்வளவு கலோரி தேவையோ, அதை விடவும் அதிகமாகச் சாப்பிடுவது, போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது. உடல் பருமனுக்கு இந்த இரண்டு காரணங்களை விடவும் முக்கியமானது, துாக்கம். ஒரு நாளில், ஏழு முதல் எட்டு மணி நேர துாக்கம், எல்லாருக்கும் அவசியம்.
தினமும், எட்டு மணி நேரம், துாக்கம் இல்லாவிட்டால், நம் உடலில், 'கிரலின்' என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். இந்த ஹார்மோன், அதீத பசியைத் துாண்டக் கூடியது. எனவே, அதிக கலோரிகள் சாப்பிட வேண்டிய கட்டாயம் வரும். அடுத்த பிரச்னை, போதிய துாக்கம் இல்லாவிட்டால், நம் உடம்பு 'ஸ்ட்ரெஸ்' ஆகும். தொடர்ந்து, இந்த நிலை நீடிக்கும் போது, 'மெட்டபாலிசம்' எனப்படும், உடல் உள் செயல்பாடுகள், குறையத் துவங்கும்; இதனால், ஏற்கனவே உடல் சேமித்து வைத்துள்ள கொழுப்பு, அப்படியே தேங்கி விடும்.

