தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக கொரோனா அறிகுறி!

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக கொரோனா அறிகுறி!

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரத்யேக கொரோனா அறிகுறி!


PUBLISHED ON : மே 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ந்து எட்டு நாட்களாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட, 8 வயது ஆண் குழந்தையை, எங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே, அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஆறு நாட்கள் நிமோனியா தொடருக்கான மருந்துகள் கொடுத்தும், பலன் இல்லாத நிலையில், அவனை இங்கு அனுப்பினர்.

பரிசோதனை



ஆறாவது நாள் இங்கு அழைத்து வந்த போது, முதல் நாள், குழந்தையின் கண்கள் சிவந்து, உதடுகளும், தொண்டையும் சிவந்து, உடலில் தடிப்புகள் ஏற்பட்டு, குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக, மூச்சு திணறலோடு சிரமப்பட்டான்.அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை செய்தோம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த முந்தைய மருத்துவமனையில், காய்ச்சல் வந்த நான்காவது நாளில், கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என்று வந்த ரிப்போட்டையும், ஏழாவது நாளில் மீண்டும் செய்த பரிசோதனையில், தொற்று உறுதியானதையும் காட்டினர்.

அதன்பின், சுவாச கோளாறுக்கு அதிதீவிர சிகிச்சையும், ஐ.வி., வாயிலாக, மருந்தும் செலுத்தி உள்ளனர். அப்படியும் எந்த முன்னேற்றமும் இல்லை என, இங்கு அழைத்து வந்தனர். ஆன்டிபயாடிக் மருந்துகளும் கொடுத்து இருந்தனர்.

இதையெல்லாம் ஆய்வு செய்ததில், 'சிறுவனுக்கு, ரத்த நாள சுவர்கள் வீங்கிக் கொள்ளும், 'கவாசாக்கி' நோய் அல்லது ஒரு வகையான பாக்டீரியா தொற்றால் ஏற்படும், 'டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' இருக்கலாம்' என்று சந்தேகம் வந்தது

.ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்றால் பாதித்த குழந்தைகளுக்கு, இது போன்ற பிரச்னை உள்ளது. ரத்த பரிசோதனையில், சிறுவனின் ரத்த நாள சுவர்களில், வீக்கம் இருப்பது உறுதியானது. எனவே, ஆன்டி பயாடிக் மருந்துகளுடன், பிளாஸ்மா சிகிச்சை, குறைந்த வீரியம் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரையும் கொடுத்தோம். இந்த சிகிச்சை கொடுத்தும், அடுத்த, 72 மணி நேரத்திற்கு காய்ச்சல் குறையவில்லை.

முடக்கு வாதம்



அதன்பின் தான், இவனுக்கு வந்திருப்பது, 'இடியோபதிக் ஆர்த்ரடீஸ்' எனப்படும், குழந்தைகளை தாக்கும், மூட்டு முடக்கு வாதம் என்று கண்டறிந்து, அதற்கான மாத்திரை கொடுத்தோம். உடனடியாக காய்ச்சல் குறைய துவங்கி, மற்ற கோளாறுகளும் படிப்படியாக சரியாகி விட்டது; சிறுவனை, 'டிஸ்சார்ஜ்' செய்து விட்டோம். இதில் கவனிக்க வேண்டியது, குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது, வழக்கமான அறிகுறிகளுடன், இது போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என்பதை, குழந்தைகள் நல மருத்துவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.

டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன்,

மருத்துவ இயக்குனர்,

காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us