தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!: மேமோகிராம் பரிசோதனையால், கேன்சர் பரவுமா!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: மேமோகிராம் பரிசோதனையால், கேன்சர் பரவுமா!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: மேமோகிராம் பரிசோதனையால், கேன்சர் பரவுமா!


PUBLISHED ON : பிப் 03, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்லா மார்பகக் கட்டியும் புற்று நோய் கட்டி அல்ல. அப்படி ஆவதற்கான சாத்தியம் மிகக் குறைந்த அளவே உள்ளது. நீண்ட நாட்களாக மார்பகத்தில் கட்டி இருப்பது, மார்பகத்தின் அளவில் அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் பாதிப்பு வரும். இது குறித்த விழிப்புணர்வு, மிகக் குறைவு என்பதால், மார்பகப் புற்று நோயால் இறப்புகளும் அதிகம். பொதுவாக, மார்பகக் காம்பின் அடிப்பகுதியில், கடினமான புற்று நோய் கட்டி, ஆண்களுக்கு வருகிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள், புற்று நோய் பாதிப்பு மரபணுக்கள் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையில், பயன்படுத்தப்படும் மிக குறைந்த கதிரியக்கத்தால், பாதிப்பு இல்லை.

மேமோகிராம் செய்வதால், கேன்சர் செல்கள் பரவும் என்பதும் தவறான அபிப்ராயம்.

மார்பகப் புற்று நோய் பாதித்தவரிடம் இருந்து, மற்றவர்களுக்குப் பரவக் கூடியது இல்லை.

டாக்டர் எஸ்.ராஜாசுந்தரம்,

புற்றுநோய் சிறப்பு மருத்துவர், சென்னை. செல்: 98410 14445


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us