PUBLISHED ON : அக் 18, 2015
தோலில் ஏற்படும் வடுக்களை நீக்க, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை, கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று
மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கும்.
இந்த வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை உண்ணுவதால், கொலாஜென் பைபர்களை உண்டாக்கும். இது சருமத்தின் செல்களை வலுப்படுத்தும். இதனால் சரும பாதிப்புகள் குணம் அடைவதோடு மட்டுமல்லாமல், பிரசவ அடையாளங்களையும் நீக்கும்.
கேரட், கீரை, முலாம் பழம் என வைட்டமின் ஏ உள்ள உணவுகளை உண்டால், உடலில் அதிக அளவு கொலாஜென் நிலவும். சிட்ரஸ் பழங்கள், மிளகு, ப்ராக்கோலி என வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொண்டால், சருமத்திற்கு கொலாஜெனை அளிப்பதோடு, ஸ்ட்ரெட்ச் குறிகள் வேகமாக குணமாக உதவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் விளங்கும்.
வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை பயன்படுத்தியும் ஸ்ட்ரெச் குறிகளை நீக்கலாம். வைட்டமின் ஈ, கொலாஜென் பைபர்களை தயாரிக்க ஊக்குவிப்பதாக இருப்பதால் பாதிப்படைந்த சரும திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெற உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கவும் உதவும்.

