PUBLISHED ON : அக் 01, 2017
நயனுக்கு தற்போது, 33 வயது. வெளித்தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவாரோ, அதைவிட அதிகமாக மனதுக்குத் தருவார்.
தோல்வி, ஏமாற்றம் என, எதிர்மறையாக எது நடந்தாலும், சோர்ந்து போய், அந்த இடத்திலேயே உட்கார்ந்து விடும் நபர் அல்ல; அதைத் தாண்டிப் போவது தான் நயனின், 'பிளஸ்'.
மனதை அமைதியாக வைத்திருக்க தவறாமல் யோகா செய்வார். தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பதை எதற்காகவும் விட்டுத் தர மாட்டார்.
ஏர்போர்ஸ்சில் வேலை செய்த அப்பாவைப் பார்த்து, தினசரி ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொண்டார். வட இந்திய உணவுகளே இவரின் விருப்பம்.
கடந்த சில ஆண்டுகளாக நயன் பின்பற்றும் இன்னொரு விஷயம், தன்னை விடவும் வயது குறைந்த நடிகர்களுடன் நடிப்பது. அப்படி இல்லாவிட்டால், தான் ரேசில் இல்லை என்ற எண்ணம், ரசிகர்களுக்கு வந்துவிடும் என்பது அவரின் நம்பிக்கை. இது நயனின் நெருங்கிய வட்டாரத்தில் கிடைத்த தகவல்.
- நயன்தாரா, நடிகை

