PUBLISHED ON : ஏப் 01, 2012
தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படும் பெரும்பாலோர், ஆயுர்வேத சிகிச்சையை நாடுகின்றனர். ஆயுர்வேத மருந்துவத்தில் இந்த பிரச்னைக்கு, சிறந்த சிகிச்சை பெறலாம். அவ்வாறு சிகிச்சை பெறும் நோயாளிகள், வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை உட்கொள்ளத் தேவையில்லை. தைராய்டு அளவு, கட்டுப்பாட்டில் உள்ளதா என, அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
இப்பிரச்னை ஏற்பட, முக்கிய காரணம், கபத்தை அதிகரிக்க வைக்கும் உணவுகளும், உடற்பயிற்சியில்லாத சோம்பலான வாழ்க்கையுமே. இதனால், சிறு வயதினர் கூட, தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். கவுதமிக்கு வயது, 13. அவள் தாய், வீட்டு வேலை செய்யும் பெண். மகளின் உடல் நிலை, அவளை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. கவுதமி, சுறுசுறுப்பின்றி சோம்பலாக இருப்பாள். பகல் பொழுதில் உறக்கம்கொள்வாள். கவுதமியின் எடையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. 13 வயது கவுதமியின் எடை, 56.6 கிலோ; உயரம், 4 அடி, 10 அங்குலம். அவள் முகம், கழுத்துப் பகுதிகள் தடித்து, பருமனாக இருந்தது. கழுத்தின் பின்புறம் உயர்ந்து, கனமாகக் காணப்பட்டது. அவளுக்கு மூச்சுக் கோளாறு மற்றும் படபடப்பு இருந்தது.
ஆங்கில மருத்துவர், அவளுக்குப் பல பரிசோதனைகளைச் செய்து, இறுதியில் தைராய்டு பிரச்னை உள்ளதாகக் கூறி, மாத்திரைகளை வழங்கினார். அந்த மாத்திரைகளை அவள் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கவுதமி, முதல் ஐந்து நாட்கள், அந்த மருந்தை எடுத்தாள். கவுதமியின் தாய்க்கு, தன் 13 வயது மகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என எண்ணம். பிடிவாதமாக ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்தார். முதலாவதாக ஆயுர்வேத மருத்துவ முறைப்படி, கவுதமியின் பிரச்னை என்ன என்பதை ஆராய்த்தோம். அவளுக்கு கபத்தின் சீற்றத்தினால் ஏற்பட்ட பிரச்னை என்று தெரியவந்தது. கவுதமியின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள், உடலில் கபத்தை அதிகரிக்க வைத்தன.
உதாரணமாக, கவுதமிக்குப் பிடித்தது, புளிப்பு சுவை மிகுந்த உணவு. பால்கோவா, லட்டு, தயிர் போன்ற உணவுகளை, அடிக்கடி உட்கொள்வாள். தினமும் மாலையில் உறங்குவாள். இவள் தாய், இவளை எந்த வேலையும் செய்யவிடமாட்டாள். உணவுப்பொருட்கள், பகலுறக்கம், சோம்பல், உடற்பயிற்சியின்மை அனைத்தும், கவுதமியின் கபத்தை அதிகரிக்க வைத்தன.
கவுதமிக்கு, முறையாக ஆயுர்வேத சிகிச்சை துவக்கினோம். கபத்தின் சீற்றத்தை கட்டுப்படுத்த, அவள் உணவு, பழக்கவழக்கங்களை மாற்றி, பகலுறக்கத்தை தவிர்க்க அறிவுறுத்தினோம்.
கபத்தை அகற்றும் வமன சிகிச்சை, கழுத்துக்கு மேற்பகுதியிலுள்ள கபத்தை அகற்றும் நஸ்ய சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சையின் இறுதியில், ஆறு வார காலத்திற்கு, மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்தப் பெண்ணின் தைராய்டு பிரச்னைக்கு, ஒரு முடிவும் ஏற்பட்டது. சிகிச்சையின் இறுதியில், அவள் உடம்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் இளைத்து, அவள் சுறுசுறுப்பாக, விளையாடி, வேலைகளைச் செய்து, அவள் வயதுள்ள மற்ற சிறுமிகளைப்போல, மாற்றம் கண்டாள். குறிப்பு: தைராய்டு பிரச்னைக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு மாத்திரையின் அளவை படிப்படியாக குறைத்து, பிறகு முழுவதுமாக அந்த மாத்திரைகளை நிறுத்திவிடலாம். அதற்கு பதிலாக, ஆயுர்வேத மருந்துகளும், சரியான உணவுகளும் கொடுக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு, எல்லா மருந்துகளும் நிறுத்தப்படும்.
