தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதுகு வலி, மூட்டுவலிக்கு டிப்ஸ்..

முதுகு வலி, மூட்டுவலிக்கு டிப்ஸ்..

முதுகு வலி, மூட்டுவலிக்கு டிப்ஸ்..


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகு வலி என்பது இன்றைக்கு எல்லா வயதினருக்கும் வருகிறது. கடுமையாக உழைப்பவர்களுக்கும் வருகிறது, சும்மா உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் முதுகு வலி வருகிறது. இதை போக்க எளிய முறைகள் உள்ளன.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லோரும் அதிக நேரம் செலவிடுவது கம்ப்யூட்டரில் தான்.

இதனால், கண்டிப்பாக முதுகெலும்பு, இடுப்பெலும்பு பிரச்னை எல்லோருக்கும் உண்டு. எந்நேரமும் ஆபிஸில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக முதுகு வலி வர வாய்ப்பு இருக்கிறது. அதனால், எப்போதும் ஒரே நிலையில் உட்காரக்கூடாது.

ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால் போதும்; மருந்து தேவையில்லை. நீச்சல் பயிற்சியால், உடலும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. உடல் எடையும் குறையும். குழந்தைகளையும் நீச்சல் பழக்குவது நல்லது. நீச்சல் உடற்பயிற்சியால் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.

முதுகுவலி உள்ளவர்கள், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அதிக பாரமான பொருட்களை தூக்கக்கூடாது. அதிக உடல் எடை இருந்தாலும் முதுகு வலி வரும்; எடையை குறைத்தால் கூட, இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம். ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்ட்ர் பேக் ஒத்த்ட்ம் கொடுத்தால், 50 சதவீதம் வலி குறையும்.

உட்காரும்போது நேரான முதுகுப்பக்கம் உள்ள நாற்காலி, அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ளும் அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது. இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில், முழங்கால் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே எழுந்து நில்லுங்கள்; அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். தூங்கும் போதும், ஒரு பக்கமாகப் படுக்கும் போதும் முழங்கால்கள் நேர் கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது. படுக்கையில் இருந்து திடும் என எழுந்திராமல், மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி, எழுந்து உட்காருங்கள். பொருட்களைத் தூக்கும்போதோ, உயர்த்தி எடுக்கும்போதோ, முழங்காலை வளையுங்கள்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறையினர் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொண்டே இருப்பது தான்.

கம்ப்யூட்டர் வைத்திருக்கும் மேஜையை, வசதிக்கு ஏற்ப ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.

நீங்கள், ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் என்றால், உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us