
ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பம் போன்ற பெண்களின் உடலில் ஏற்படும் பிரத்யேக மாற்றங்களால், நோய்களும் வித்தியாசமாக வெளிப்படலாம்.
பத்து பெண்களில் நான்கு பேர் இப்பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.
தழும்புகளை ஏற்படுத்தாத, நீண்ட நாட்கள் ஓய்வு தேவைப்படாத வகையில், வெரிகோஸ் வெயின் கோளாறுக்கு, நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது, கெண்டைக்கால் தசை பயிற்சிகள் செய்வது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்கள், வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணம் தரும்.
'டிவிடி'
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவற்றால், 'டீப் வெயின் த்ரோம்போசிஸ்' என்ற 'டிவிடி' ரத்த நாளங்களில், தீவிர ரத்த உறைதல் ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் சிகிச்சை அவசியம்.
ரத்தம் உறையும் தன்மை இயல்பை விட அதிகமாக இருப்பவர்களுக்கு இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அடைப்பு
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, சிறுநீரக பிரச்னைகள், இதய நோய்கள் ஆகியவை, புகை போக்கியின் உள்ளே படியும் புகை கரியை போன்று, உடல் முழுதும் உள்ள ரத்தக் குழாய்களில் சுருக்கம், அடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். சர்க்கரை நோயால் பாதங்களில் உணர்வு குறைபாடு ஏற்படுவதால், இது பாதங்களில் புண்கள், காயங்கள் உண்டாவதற்கு எளிதில் வழிவகுக்கிறது.
எனவே, வீட்டில் இருக்கும் போதும் பாதுகாப்பான காலணிகளை அணிவது நல்லது.
அறிகுறிகள்
சிறிது துாரம் நடந்ததும் கெண்டைக்காலில் வலி ஏற்படுவது முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிந்தால், எளிய மருந்துகளே நோய் தீவிரமடைவதை தடுக்க உதவும். ஆனால், கால் வலி என்பது ஒரு பொதுவான பிரச்னையாக, அதற்கு பல காரணங்கள் இருப்பதாலும், ரத்தக் குழாய் தொடர்பான காரணங்கள் பெரும்பாலும் கவனத்தில் வருவதில்லை.
அழற்சி
ரத்தக் குழாய்களில் ஏற்படும் குருதிநாள அழற்சிகள் பெண்களையும் பாதிக்கின்றன. ஆண்களை விட இது பெண்களிடம் குறைவாக காணப்பட்டாலும், இந்த குருதிநாள அழற்சிகள் வேகமாக வளரும் தன்மையையும், வெடிக்கும் அதிக அபாயத்தையும் கொண்டுள்ளன. எனவே, ஆரம்பத்திலேயே இப்பாதிப்பிற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, கரோடிட் தமனி நோய் எனப்படும்.
திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்யலாம்.
பெண்களுக்கு ரத்தக் குழாய்களின் விட்டம் சிறியதாக இருந்தாலும், இப்பாதிப்பின் விளைவுகள் ஆண்களுக்கு ஏற்படுவதை போன்றே உள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு தரும் முக்கியத்துவத்தை, தங்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதில் பெண்கள் காட்டுவதில்லை.
பாதுகாப்பான, சரியான காலணிகளை அணிவது, நீர்ச்சத்து குறையாமல் உடலை வைத்திருப்பது, நோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது போன்ற அடிப்படை விஷயங்களை செயதாலே பெண்கள் நலமுடன் வாழலாம்.
டாக்டர் எ.ஷப்னம் பாத்திமா, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ரேலா மருத்துவமனை, சென்னை91500 11579, 044 - 6666 7777info@relainstitute.com

