
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வி. சித்ரா, நத்தம்: என் மகனுக்கு, 29 வயதாகிறது. கருவாடு, அப்பளம், வடகம் போன்ற எண்ணெயில் பொரித்த உணவையே விரும்பி சாப்பிடுகிறான். இந்த வயதில் அது பாதிப்பை ஏற்படுத்துமா?
நம் இந்தியர்களுக்கு இதயநோய் வரும் தன்மை, மற்றவர்களைக் காட்டிலும், 15 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே சிறுவயதில் இருந்தே, எண்ணெயில் பொரித்த உணவை நன்கு குறைப்பது நல்லது. பொரித்த உணவு வகைகள், கெட்டக் கொழுப்பை அதிகரித்து, நேரடியாகவே ரத்தக்குழாயின் உட்புறச் சுவரை பாதிக்கின்றன.

