தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க!: நாலரைக்கு எழுவேன்: ஆறரைக்குள் சாப்பிடுவேன்!

நாங்க இப்படிதானுங்க!: நாலரைக்கு எழுவேன்: ஆறரைக்குள் சாப்பிடுவேன்!

நாங்க இப்படிதானுங்க!: நாலரைக்கு எழுவேன்: ஆறரைக்குள் சாப்பிடுவேன்!


PUBLISHED ON : டிச 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகராக என் வாழ்க்கையைத் துவங்கி, முதல், 15 ஆண்டுகள், ஒரு ஆக் ஷன் ஹீரோ என்ற முத்திரை எனக்கு இருந்தது. ஆக் ஷன் செய்வதைத் தவிர, வேறு எந்த வேலையையும் யாரும் தரவில்லை. இது பெரிய தழும்பாக என் மனதில் பதிந்து விட்டது.

என் மீது இருந்த, 'இமேஜ்' முழுவதையும் அழித்து. வெளியில் வந்து விட்டேன். இப்போது, எந்த முத்திரையையும் என் மீது குத்த முடியாது.

பணத்திற்காக சினிமாவிற்கு வந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக பணத்திற்காக மட்டும் வேலை செய்வதில்லை; சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களில் மட்டும் நடிக்கிறேன்.

என் நெருங்கிய தோழி என்னை போனில் அழைத்து, உன்னுடைய, 'தி பேட் மேன்' படத்தைப் பார்த்தபின், மாதவிலக்கு நாட்களில், என் மகளிடம் நான் நடந்து கொள்ளும் விதமே மாறிவிட்டது என்றார்.

நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது, இரவு நேரத்தில், தனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டும் என்று என் தோழியின் காதில் அவரின் மகள் கிசுகிசுத்ததைக் கேட்டு, நானே அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, தேவையானதை வாங்கிக் கொடுத்தேன். இன்று, என் தோழியின் மகளும், என்னுடைய சிறந்த தோழியாக உள்ளார்.

சர்க்கரை கோளாறும், இதய நோய்களும் நம்மை அதிக அளவில் பாதிக்கிறது. அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்திருப்பது; மாலை, 6:30 மணிக்கு பின் எதுவும் சாப்பிடுவதில்லை.

இந்த இரண்டும் பழக்கங்களும் என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக உணர்கிறேன். உங்களின் 'பிட்னெஸ்' ரகசியம் என்ன? என்ற தவறாமல் கேட்கின்றனர். 'டிசிப்ளின்' என்பது தான் பதில்.

அக் ஷய் குமார், பாலிவுட் நடிகர், மும்பை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us