sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் ஹார்மோன் சாப்பிடுகிறோம்!

/

ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் ஹார்மோன் சாப்பிடுகிறோம்!

ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் ஹார்மோன் சாப்பிடுகிறோம்!

ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் ஹார்மோன் சாப்பிடுகிறோம்!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைராய்டு பாதிப்பு அதிகரித்து இருப்பதோடு, 12, 13 வயது குழந்தைகளுக்கு இருப்பதையும் பார்க்கிறோம். பாரம்பரிய மருத்துவத்தில், 'கலகண்டம், கண்டமாலா' என்ற பெயர்களில், கழுத்தைச் சுற்றி மாலையாக வருவது, கழுத்தைச் சுற்றி வீங்கி இருப்பது என்று கழுத்து பகுதியில் வரும் பிரச்னைகளை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுஷ்ருதா குறிப்பிட்டு உள்ளார்.

தைராய்டு பிரச்னை என்றவுடன் உடனடியாக ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவது தான் வழக்கம். முட்டைகோஸ், காலிபிளவர் உட்பட தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலும் தரப் படுகிறது.

மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்கும் முன், எதனால் இப்பிரச்னை வந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம். காரணம், ஹார்மோன் மாத்திரைகளை 5 மி.கி., என்ற அளவில் ஆரம்பித்து, 10 மி.கி., 20, 30 என்று 100 மி.கி., வரை குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரித்து, பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிலை தான் உள்ளது.

பாரம்பரிய மருத்துவத்தில் உடலில் கபம் அதிகமானால் ஹைப்போ தைராடிசம், வாதம் அதிகமாவதால் ஹைப்பர் தைராடிசம் என்று பார்க்கிறோம். எங்களுடைய அனுபவத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் இளம் வயதினர், முழுமையாக அசைவ உணவை சார்ந்து இருக்கும் போது, தைராய்டு பிரச்னை வருகிறது.

சமீபத்தில் என்னிடம் ஆலோசனை பெற்றவருக்கு ஹைப்போ தைராடிசம் இருந்தது. தினசரி சாப்பிடும் அசைவ உணவுகளை குறைத்து, மூன்று மாதங்கள் ஆயுர்வேத மருந்துகள், யோகா செய்யச் சொன்னதில், தைராய்டு ஹார்மோன் அளவு சீரானது.

இறைச்சி

அசைவ உணவுகளுக்கு எதிரானது கிடையாது ஆயுர்வேதம். எப்படி, என்ன அளவுகளில் சாப்பிடணும், குறிப்பிட்ட இறைச்சி எந்த தோஷத்தின் மேல் செயல்படுகிறது என தெளிவாக கூறுகிறது. தற்போது ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி, முட்டை சாப்பிடுவதால் பிரச்னை இல்லை.

பிராய்லர் கோழி, முட்டை, மாட்டிறைச்சி சாப்பிடும் போது, அந்த விலங்கு, கோழிகளின் உடலில் அவற்றின் வளர்ச்சிக்கு சுரக்கும் ஹார்மோன்கள், கூடுதல் வளர்ச்சிக்கு தரப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோன் ஊசிகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு பிரச்னை

தன் கன்று வளர வேண்டும் என்பதற்காக பசு பால் தருகிறது. அதில் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளன. ஒரு டம்ளர் பால் குடித்தால், ஒரு டம்ளர் ஹார்மோன் சாப்பிடுகிறோம் என்பதை மனதில் வையுங்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு டம்ளர் பால் குடிக்கலாம். அளவுக்கு அதிகமானால், அதுவே தைராய்டு பிரச்னைக்கு வழி செய்யலாம்.

தயிராகும் போது, இதில் உள்ள ஹார்மோன்கள் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கப்படுகிறது. இந்த புளித்த ஹார்மோன்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன என்பது பற்றி விரிவான ஆராய்ச்சிகள் தேவை.

ஒரு பொருள் இன்னொன்றாக மாறும் போது, அதன் குணம் முழுமையாக மாறும். பால் கபத்தை குறைக்கும்; தயிர் சளியை அதிகப்படுத்தும். எங்களுடைய அனுபவத்தில் பால், பால் பொருட்களை தவிர்க்கச் சொல்லும் போது, நல்ல பலன் இருப்பதை பார்க்க முடிகிறது.

உளுந்து

பாரம்பரிய மருத்துவத்தில் உளுந்தை வறுத்து, பொடித்து, கஞ்சியாக காய்ச்சி குடிக்கச் சொல்கின்றனர். வறுத்த உளுந்து பொடியில் லட்டு செய்து சாப்பிடலாம். நம்முடைய நுால்களில் இட்லி, தோசைக்கான எந்த குறிப்பும் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்கு அறிமுகமான உணவு இட்லி. ஆரோக்கியமான உணவு, நாம் பழகி விட்டோம் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, பிரிஜ், கிரைண்டர் வசதி இல்லாவிட்டால், மாவை அரைத்து வைத்து, அடிக்கடி அவித்து சாப்பிடுவோமா என்பது சந்தேகம் தான். தாவர ஹார்மோன் அதிகம் உள்ள உளுந்தை ஏழு நாளும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்னை வரலாம். புளிக்க வைத்த தயிர் போன்றே கபத்தை அதிகரிக்கும்.

பஞ்சகர்ம சிகிச்சை

ஹைப்போ தைராடிசத்திற்கு பஞ்சகர்ம சிகிச்சையில் வமனம், நஸ்யம, வஸ்தி செய்வோம்.

கபத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். சிறிது பால், நெய், எண்ணெய் கலந்த மருந்துகள் தருவது, கபத்தை அதிகரிக்கக்கூடிய உளுந்தை சாப்பிடச் சொல்வோம்.

டாக்டர் சுதீர் ஐயப்பன்,

டாக்டர் மீரா சுதீர்,

ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை

99623 50351, 86101 77899







      Dinamalar
      Follow us