தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/வாய் துர்நாற்றத்திற்கு காரணம் என்ன?

வாய் துர்நாற்றத்திற்கு காரணம் என்ன?

வாய் துர்நாற்றத்திற்கு காரணம் என்ன?


PUBLISHED ON : ஜூலை 31, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

வாயில் ஏற்படும் பிரச்னைகளால் உடல்நல பாதிப்பு வருமா?

சமீபத்திய ஆய்வுகளின் படி, ஈறுநோய்களால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஈறுகளின் மீது நாம் சாப்பிடும் உணவு சரியாக சுத்தம் செய்யாவிட்டால் படிந்து, பற்காரையாக மாறுகிறது. வாய் துர்நாற்றம், ஈறுவீக்கம், பிரஷ் செய்யும் போது ஈறுகளில் ரத்தம் வருதல், பல் ஆடுதல் போன்றவை ஈறுநோய்க்கான அடையாளங்கள். பாக்டீரியா வாயினுள் இருப்பதால், ரத்தநாளங்கள் வழியாக இருதயத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே இருதயநோய்க்கான சாத்தியம் உள்ளது. சர்க்கரை நோயிருப்பின், அவை அதிகமாகும்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன? எவ்வாறு சரிசெய்வது?

பற்சொத்தை பற்களை அரித்து குழியை உருவாக்குகிறது. இதனுள் உணவுப் பொருள் தங்கி துர்நாற்றம் ஏற்படுத்தும். உணவுப் படலம் படியும் போது ஈறுகள் பற்களிடமிருந்து விலகிவிடும். இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் பிரஷ் செய்யும் போது ஈறுகளில் இருந்து ரத்தம் வரும். அதிகநேரம் வாய் உலர்வாக இருத்தல், காய்ச்சல் நேரம், அல்சர் பிரச்னை, சளி, டான்ஸில் பிரச்னையால் துர்நாற்றம் ஏற்படலாம். தற்காலிகமாக 'மவுத் வாஷ்' உபயோகிக்கலாம். சிகிச்சையின் மூலம் நிரந்தரமாக துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

எனது மேல் பற்கள் சிறிது தூக்கலாகவும், கீழே இறங்கியும் உள்ளன. சிரிக்கும் போது ஈறு தெரிகிறது. இதற்கு அறுவை சிகிச்சை உண்டா?

பெண்ணுக்கு 12 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 14 வயதுக்கும் முன்பும் பருவ வளர்ச்சியை பயன்படுத்தி, தாடையின் அமைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யலாம். அதற்கு மேல் பல்லில் நிலையாக பொருத்திய 'கிளிப்' அணிந்து பல்லை சீரமைக்கலாம். மேல்தாடை ஓரளவு இறங்கி இருந்தால் 'மினி இம்ளான்ட்' அல்லது 'மினி ஸ்குரூ' தாடையில் பொருத்தி பற்களை சரிசெய்யலாம். தாடை வளர்ச்சி அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை தான் சரி.

- டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை. 94430 61160

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us