PUBLISHED ON : அக் 07, 2018

அ நிறம் | அளவு
ஒரு பொருளை, இரு கண்களால் பார்க்கும் போது, ஒரே பிம்பமாகத் தெரிந்தாலும், இரண்டு கண் பார்வைக்கும், மெல்லிய வேறுபாடு இருக்கும். இரண்டு கண்களின் பார்வையையும், மூளை ஒருங்கிணைத்து, ஒரே பிம்பமாகக் காட்டுகிறது.
இது தான், 'பைனாகுலர் பார்வை!' இரண்டு கண்களிலும் தெளிவான, ஆரோக்கியமான பார்வை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
தவிர, இரண்டு கண்களின் பார்வையும், ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டியதும் முக்கியம்; அப்போது தான், பார்க்கும் பிம்பத்தை கவனமாகப் பார்க்க முடியும்.
