உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 26, 2016

அ நிறம் | அளவு
ஜலதோஷம் மற்றும் புளூ (cold and flu)
* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போக வேண்டாம். ஆப்பிளில் தேவையான அளவு நார்ச்சத்தும் (சுத்தமாக கழுவிய பின் தோலுடன் சாப்பிட வேண்டும்) ஆன்டி ஆக்சிடென்டும் உள்ளது; இது எதிர்ப்பு சக்தியை தர வல்லது.
* ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் இயற்கையாகவே வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது.
*சமையலில் வெங்காயம், பூண்டு நிறைய சேர்த்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
* வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சம் பழங்களை சாப்பிடலாம்.
