தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மனஅழுத்தத்திற்கும், இருதயத்துக்கும் என்ன தொடர்பு?

மனஅழுத்தத்திற்கும், இருதயத்துக்கும் என்ன தொடர்பு?

மனஅழுத்தத்திற்கும், இருதயத்துக்கும் என்ன தொடர்பு?


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் இருதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. தற்போது குடும்பத்துடன் ஊட்டி செல்ல உள்ளோம். நானும் உடன் செல்லலாமா? எம்.நந்தபாலன், கோவை



உங்களுக்கு டென்ட் பொருத்தி ஆறு மாதங்களாகி விட்டதால், உங்கள் இருதய நிபுணரிடம் சென்று, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். அவை இரண்டும் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக கோடை விடுமுறையை ஊட்டியில் கழிக்கலாம். ஆனால், அங்கு செங்குத்தான பாதைகளில் ஏறுவதை தவிர்ப்பது நல்லது. அதிக குளிரும் இருதயத்தை பாதிக்கும் என்பதால், நல்ல தரமான கம்பளி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது.



ஆஞ்சியோ பிளாஸ்டி என்றால் என்ன? எஸ்.பாலகிருஷ்ணன், மதுரை



இருதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் அடைப்பை சரிசெய்ய மூன்று வகை சிகிச்சை முறைகள் உள்ளன. முதலாவதாக மருந்து, மாத்திரை சிகிச்சை. 2வதாக அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யும் பைபாஸ் சர்ஜரி சிகிச்சை, 3வதாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை. ஆஞ்சியோ என்றால் ரத்தக்குழாய் என்றும், பிளாஸ்டி என்றால் சரி செய்வது என்றும் பொருள். காலிலோ, கையிலோ உள்ள ரத்தக்குழாய்களில் சிறு துவாரமிட்டு, அதன் வழியாக 'கதீட்டர்' என்னும் ரத்தக்குழாயை சொருகுவர். அதை இருதயம் வரை செலுத்தி, அதிலிருந்து ஒரு ஒயரை கொண்டு, அடைப்பு இருக்கும் பகுதியில் பலூன் மூலம் விரிவடையச் செய்வர். அப்போது டென்ட் என்னும் ஸ்பிரிங்கை (பால்பாயின்ட் பேனாவில் உள்ளதை போன்றது) பலூன் செய்த இடத்தில் பொருத்தப்படும். இதனால், மீண்டும் அடைப்பு வராமல் பாதுகாக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகையான பலூன், ஸ்பிரிங் மற்றும் கருவிகள் கொண்டும் இச்சிகிச்சை செய்யப்படுகிறது.



இருதய நோயாளிகள் மனஅழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? கே.சோமசுந்தரம், திண்டுக்கல்



மனஅழுத்தம் உடல் உறுப்புகளில் எந்த உறுப்பை பாதிக்கிறதோ, இல்லையோ, நிச்சயமாக இருதயத்தை பாதிக்கிறது. ஏனெனில் மனஅழுத்தம் இருதய துடிப்பு, ரத்தஅழுத்தத்தை பாதிக்கிறது. மேலும் ரத்தக்குழாயை சுருங்க செய்கிறது. ரத்தநாளங்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படவும் செய்கிறது. இதனால், இருதய நோய்க்கும், மனஅழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனதை நிம்மதியாக வைத்து கொண்டால் இருதய நோய் வராமல் தடுக்கவும், இருதய நோயாளிக்கு மீண்டும் பாதிப்பு வராமலும் தடுக்க உதவும். மனதை நிம்மதியாக வைத்திருக்க, கடுமையான முய ற்சி, பயிற்சிகள் தேவை. இதற்கு தான் யோகா, தியானம், ஆன்மிகம், நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவை பெரிதும் உதவுகிறது. இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் டென்ஷன் அதிகரிப்பது உண்மையே. இது நம் உள்ளத்தையும் பாதிக்காமல் இருக்க மேற்கண்ட பயிற்சிகளை செய்வது நல்லது.



- டாக்டர் சி.விவேக்போஸ் மதுரை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us