sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஆஸ்துமாவுக்கு தீர்வு என்ன

ஆஸ்துமாவுக்கு தீர்வு என்ன

ஆஸ்துமாவுக்கு தீர்வு என்ன


PUBLISHED ON : ஏப் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனது கணவருக்கு இளைப்பு பிரச்னை உள்ளது.

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் நன்றாக இருக்கிறார். கோடைகாலம் நெருங்க, நெருங்க அவருக்கு வீசிங் ஆரம்பித்துவிடுகிறது. அவருக்கு ஏன் இப்படி வருகிறது. தடுக்க ஆலோசனை வேண்டும்.

வீசிங் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆஸ்துமாவே முக்கிய காரணம். கோடையில் பிரச்னை வருவதால் ஆஸ்துமாவே காரணமாக இருக்கலாம். இது ஒரு வகை ஒவ்வாமை. இப்பாதிப்பு உள்ளவர் அவருக்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை சுவாசிக்க நேரும் போது அவருடைய மூச்சுக்குழாய் சுருங்குகிறது. சளி உருவாக்கமும் அதிகரிக்கிறது.

இதனால் தேவையான அளவு காற்று நுரையீரல் உள்ளே செல்ல முடியாமல் மூச்சுத்திணறல், இருமல் ஏற்படுகிறது. தலையணை, படுக்கை விரிப்புகளில் உள்ள துாசி, பூக்களின் மகரந்தம், தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை, பஞ்சாலை துாசி போன்றவற்றால் இப்பாதிப்பு

ஏற்படுகிறது. குளிர்காலத்தில் வாகன, தொழிற்சாலை புகையுடன் பனியும் சேர்ந்து ஸ்மாக் எனப்படும் நச்சுக்கலவையாக மாறுகிறது. அந்நாட்களில் அதிகாலை நடைபயணம் மேற்கொள்வதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வீசிங் ஏற்படுகிறது.

ஆனால் சிலருக்கு கோடை காலத்தில் மட்டும் வீசிங் ஏற்படும். இதற்கு வீட்டில் உள்ள துாசி முக்கிய காரணமாகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் அறையின் துாசிகள் காற்றில் மிதக்கும். அவற்றை சுவாசிக்கும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

கோடையில் மலரும் பூக்களின் மகரந்ததுாளும் இதற்கு காரணமாக இருக்கிறது. எனவே ஆஸ்துமா பிரச்னை உள்ள ஒருவர் அதனை துாண்டக்கூடிய காரணிகளில் இருந்து விலகி இருக்க முடிந்தால், வீசிங் பிரச்னை வராமல் தவிர்க்கலாம். ஒவ்வொருவருக்கும் ஆஸ்துமாவை துாண்டக்கூடிய பொருட்கள் மாறுபடும். இதை ஸ்கின் ப்ரிக் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். இதன் மூலம் அக்காரணிகளில் இருந்து விலகி இருக்கலாம்.

- டாக்டர் பிரபாகரன் ரத்தினம்

நுரையீரல் நிபுணர், மதுரை, 98400 03404.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us