தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்?

இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்?

இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்?


PUBLISHED ON : நவ 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைதா, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு சேரும்; உடல் பருமன் அதிகரிக்கும்.

தொடர்ச்சியாக, பல உடல் பிரச்னைகள் வரும்; இது, இதயத்திற்கு நல்லதல்ல என்ற விழிப்புணர்வு, 90 சதவீதம் பேருக்கு இருக்கிறது.

ஆனால், இதை நினைத்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது. காரணம், நடைமுறையில் இவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பவர்கள் வெறும், 1 சதவீதத்தினர் மட்டுமே. விளைவு, 30 - 50 வயதிற்கு உட்பட்ட வயதில் உள்ளோர், அதிக அளவில் மாரடைப்பில் பாதிக்கப்படுகின்றனர்.

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், முதல், 'அட்டாக்'கிலேயே பாதிப்பு மிக தீவிரமாக இருக்கிறது. துாங்கும் நேரம், சாப்பிடும் நேரம், வழக்கத்தில் இல்லாத உணவு இந்த மூன்றும், 'பயாலஜிக்கல் கிளாக்' எனப்படும், நம் உயிர் கடிகாரத்தின் செயல்பாட்டை முற்றிலும் மாற்றி விடும்.

என்ன செய்யலாம்?

உணவு தான் அதிகமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். தாத்தா, பாட்டி காலத்திற்கே திரும்பச் செல்வது ஒன்று தான், இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அவர்கள் செய்ததைப் போன்று, வீட்டிலேயே சமைத்து, நிதானமாக சாப்பிடுவது தான், இதற்கு நிரந்தர வழி.

இளம் வயதினர், ஆண்டிற்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்தால், பிரச்னை இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்த்து விட முடியும். 'இ.சி.ஜி., எக்கோ, டிரெட் மில்' போன்ற அடிப்படையான சில பரிசோதனைகளில் பிரச்னை இருந்தால், சில மாற்றங்கள் தெரியும்.

முடிந்தவரை நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது, தினமும், 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது பாதுகாப்பைத் தரும்.

டாக்டர் சஞ்சய் செரியன்,

இதய நோய் மருத்துவர்,

பிரன்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை.

044 - 4201 7575

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us