தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பிஸ்கட் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

பிஸ்கட் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

பிஸ்கட் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?


PUBLISHED ON : டிச 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாப்பிட கூடிய உணவுகளை விடவும் தவிர்க்க வேண்டிய உணவுகளே இன்று நம் வழக்கத்தில் அதிகம் உள்ளது. குறிப்பாக வறுத்த, பொரித்த, பேக்கரி உணவு களை தினசரி சாப்பிடுவது பழக்கமாகி விட்டது.

என்ன உணவு என்பதை விடவும், உணவை எந்த அளவு வெப்பத்தில் சமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். எந்த உணவாக இருந்தாலும், அது, 100 டிகிரி செல்ஷியசுக்கு மிகாத வெப்பத்தில் சமைத்ததாக இருக்க வேண்டும். அது தான் செரிமான மண்டலத்திற்கு நல்லது.பிஸ்கட் போன்ற உணவுகள் உடலுக்கு தீங்கு எதுவும் செய்வதில்லை என்று நம்புகிறோம்; இது தவறு. பேக்கரி உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் இரண்டும், அதிக பாதிப்பை நம் குடலுக்குத் தரும்.எண்ணெயில் பொரிக்கும் போது, 180 - 280 டிகிரி வரைக்கும் மாறுபடும். பிஸ்கட்டை, 'பேக்' செய்வதற்கும், இதே அளவு வெப்பம் தேவைப்படுகிறது.

ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகள் மட்டுமே, 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் சமைக்கப்படுகின்றன. வெறும் கலோரி தவிர, எந்த சத்துக்களும் இல்லை என்பதோடு, அதிக வெப்பத்தில் தயாராகும் பிஸ்கட், நொறுக்குத் தீனி போன்றவை குடலுக்கு அதிக வேலை பளுவை தருகின்றன. சிரமப்பட்டு செரிமான வேலையை செய்வதால், செரிமான மண்டலம் காலப்போக்கில் பலமிழந்து விடும். பிஸ்கட் சாப்பிட்ட ஓரிரு நாளில் இது தெரியாது.தொடர்ந்து இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தின் உறிஞ்சும் தன்மை குறைந்து, அடிப்படை சத்துக்கள் இயற்கையாக உள்ள கீரை, பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்ற வற்றில் இருக்கும் நல்ல சத்துக்களை உறிஞ்ச முடியாமல், சிறு குடல் பலமிழந்து விடும்.

இது தவிர, பிஸ்கட், பேக்கரிபொருட்களில், 'ஹைட்ரோஜெனேடட்' எண்ணெய் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. தொடர்ந்து, இது போன்ற உணவுகளை சாப்பிடும் போது உடல் அதிகரிக்கிறது.வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு தொடங்கி, கேன்சர் வரை அனைத்து பிரச்னைகளும் வருகிறது. எனவே, துரித உணவுகளான சமோசா, பீட்சா, பர்கர் போன்றவைகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. வீட்டில் தயாரிக்கும் பாரம்பரிய நொறுக்குத் தீனி நல்லது.

டாக்டர்ஜி.சதீஷ்குமார்,

சித்த மருத்துவர்,

சென்னை

90920 85847, 98400 25847


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us