PUBLISHED ON : டிச 11, 2019

* குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பொதுவாக என்ன பாதிப்பு ஏற்படும்?
பொதுவாக
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளது.
வைரஸ், நிமோனியா காய்ச்சல் வரும். தொண்டை, மூக்கு சளியால் பாதிப்பு,
மழையில் நனைந்தால் டைபாய்டு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.
* அறிகுறி என்ன?
2
நாட்கள் மூக்கில் நீர் வழிதல், அடிக்கடி தும்முதல், தலைபாரம், தொண்டைவலி
தென்படும். பிறந்து சிலமாதங்கள் ஆன குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக
அழுதுகொண்டே இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். அம்மாதிரியான
நேரங்களில் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை வழங்க வேண்டும்.
* நோய் தொற்றை தடுக்க என்ன வழி?
குளிர்ந்த
இடத்தில் படுக்க வைக்க கூடாது, நோயாளிகளிடம் இருந்து தள்ளி இருக்க
வேண்டும். தொட்டில், மெத்தையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட
காலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தடுப்பூசி இட வேண்டும்.
* குழந்தைகளின் எடை கூடினால் ஆபத்தா?
பிறந்த
குழந்தை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்க வேண்டும். அதன்பின் ஆறுமாதத்தில்
இருமடங்கு அதிகரித்து ஒருவயதில் 9 கிலோ, 2 வயதில் 14 கிலோ, 4 வயதில் 16, 5
வயதில் 18 கிலோ வரை இருக்க வேண்டும். அதற்கு 6 மாதம் வரை கட்டாயம்
தாய்ப்பாலும், அதன்பின் ஊட்டச்சத்து உணவுகளும் அவசியம்.
* எந்த மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்?
குளிர்காலத்தில்
புளிப்பான, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். சுடுநீர் பருக
வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொட்டுக் கடலை, கரும்புச் சர்க்கரை,
முந்திரி, பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட புரதம், இரும்புச்
சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.
* உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்?
உடலில்
சாதாரணமாக 98.4 பாரன்ஹீட் செல்சியஸ் இருக்க வேண்டும். அதற்குமேல்
இருந்தால் காய்ச்சல் உள்ளது. அதற்கு குறைவாக இருந்தால் உடலில் குளிர்ச்சி
அதிகரித்து வலிப்பு வரலாம். மிகவும் அதிகரித்தால் மூளையைக்கூட பாதிக்க
வாய்ப்புள்ளது. ஆகையால் பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் வெது
வெதுப்பான சுடுநீரில் குளிப்பாட்ட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை
தலைக்கு குளிப்பாட்டலாம். உடலில் ஸ்வெட்டர், கை, கால்களில் சாக்ஸ் அணிவது
நல்லது.
டாக்டர் விஜயசேகர்
குழந்தைகள் நல மருத்துவர்
பழநி
98421 41945
