sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆப்பிரிக்கா

/

செய்திகள்

/

கானாவில் ராதா கல்யாண உற்சவம்

/

கானாவில் ராதா கல்யாண உற்சவம்

கானாவில் ராதா கல்யாண உற்சவம்

கானாவில் ராதா கல்யாண உற்சவம்


டிச 10, 2025

Google News

டிச 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ராதா கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடனும் சிரத்தையுடன் நடந்தேறியது. உற்சவத்தின் முதல் பகுதியாக முதல் நாளன்று தோடையமங்கலம், குரு கீர்த்தனம், அஷ்டபதி, பஞ்சபதி ஆகியவை பாடப்பட்டன. நிகழ்வின் இறுதியாக விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜெபிக்கப்பட்டது. பின்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரண்டு நாள் நிகழ்வில் திவ்யநாமம், ஸ்ரீ ராதா கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மங்கள இசை, தீப ப்ரதக்ஷிணம் உள்ளிட்ட வேத பாராயணம், பக்தர்கள் கோஷங்கள் என முழு சூழலும் பக்தி நிறைந்து இருந்தது.


புதிய முயற்சியாக, ஸ்ரீனிவாச பாகவதர் மற்றும் நாகராஜன் பாகவதர் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற பெண்கள் முன்னின்று பாடிய பாடல்கள் மனதை குளிர வைத்தது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டினை பலரும் பாராட்டினர். அவர்களின் அர்ப்பணிப்பு விழாவுக்கு தனித்துவமான ஆன்மிக அழகு சேர்த்தது. இந்த ராதா கல்யாணம் அக்ரா வாழ் இந்திய சமூகத்தை ஒரு குடும்பமாக இணைத்து, அன்பு, பக்தி, ஐக்கியம் ஆகியவற்றை மீண்டும் நினைவூட்டிய ஒரு அழகான ஆன்மீக அனுபவமாக இருந்தது.


நிகழ்ச்சி முன்னின்று நடத்தி கொடுத்த உபயதாரர்கள், பக்தர்கள் ஆகியோருக்கு கானா விஷ்ணு குழுவின் மூத்த உறுப்பினர் நாகராஜன், தலைமை ஒருங்கிணைப்பாளர் கோட்டயம் ரமேஷ், ராமா ராஜகோபாலன், வெங்கடேஷ் மற்றும் அகல்யா படேல் ஆகியோர் நன்றி கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உள்ளம் நிறைந்த ஆனந்தத்துடன், தெய்வீக அருளைப் பெற்ற உணர்வுடன் திரும்பினர்.


- கானாவிலிருந்து நமது செய்தியாளர் அரவிந்த் என்.ஜி.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us