/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் - கானாவில் ஆன்மிக சிறப்புவிழா
/
2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் - கானாவில் ஆன்மிக சிறப்புவிழா
2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் - கானாவில் ஆன்மிக சிறப்புவிழா
2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷம் - கானாவில் ஆன்மிக சிறப்புவிழா
ஜன 02, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷ நிகழ்வு, கானாவில் மிகுந்த ஆன்மிக மகிழ்ச்சியுடனும் பக்தி பூர்வமாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்களின் பெரும்பங்கேற்பும் ஆன்ம நம்பிக்கையும் இந்த நிகழ்வை இன்னும் அழகுபடுத்தியது.
பிரதோஷ பூஜையின் ஆரம்ப பகுதியில், சிவபெருமானுக்கு பால், தயிர், தேன், விபூதி அபிஷேகம் சிறப்பாக செய்யப்பட்டது. அபிஷேகத்தின் மந்திர ஓசைகளின் அதிர்வு அனைவரையும் பேரானந்தத்தில் ஆழ்த்தின.
அபிஷேகம் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரம், சமகம், சூக்தங்கள் போன்ற வேத மந்திரங்கள் முழங்கின. சிவபெருமானின் மீது பாடப்பட்ட தெய்வீக கீர்த்தனைகள், ஆலயத்தை முழுமையாக ஒரு ஆன்மிக திருவிழா சூழலாக மாற்றின. “ஓம் நம சிவாய” மந்திர ஓசைகள் முழங்கியபோது, பக்தர்கள் தங்கள் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சைவ சமயத்தின் முதன்மைத் திருநாள்களில் ஒன்றான பிரதோஷத்தை இவ்வாறு ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடுதல் அனைவருக்கும் சிறப்பான தருணமாக அமைந்தது.
இந்த அனைத்திற்கும் பின்னால், பக்தர்களின் சிறப்பான ஆதரவும் தன்னார்வ பணிகளும் முக்கிய பங்காற்றின. கானா இந்து மடாலயம், பிரதோஷ நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தது.
ஆலயத்தில் நடைபெற்ற இந்த ஆன்மிக விழா, 2026 ஆம் ஆண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைந்து, அனைத்து பக்தர்களுக்கும் அமைதி, ஆரோக்கியம், நற்கதி நிறைந்த ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டினர்.
- கானாவிலிருந்து நமது செய்தியாளர் அரவிந்த் என் ஜி
Advertisement

