/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு 'துணிந்தெழு விருது'
/
பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு 'துணிந்தெழு விருது'
ஜன 20, 2026

பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு 'துணிந்தெழு விருது'
ஸ்கை தமிழ் ஊடகத்தின் 'துணிந்தெழு' சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனையில் நடைபெற்ற “துணிந்தெழு சங்கமம்” விழாவில், சர்வதேசப் புகழ் பெற்ற 'சரிகமப' பாடகர் சுகிர்தராஜா சபேசன் அவர்களுக்கு உயரிய 'துணிந்தெழு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கலைத்துறையில் அவர் ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டி, விழாவில் 'துணிந்தெழு விருது' வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அவருக்குச் சிறப்பு 'வாழ்த்துப்பா' வாசிக்கப்பட்டு, 'இசை இளவரசன்' என்ற பட்டமும் வழங்கி கலைப்பயணத்திற்கான கௌரவமும் அளிக்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, பாடகர் சுகிர்தராஜா சபேசன் தனது மதுரக்குரலினால் இரண்டு பாடல்களைப் பாடி சபையினரை மகிழ்வித்தார். இலக்கியமும் இசையும் இணைந்த அந்தத் தருணம் விழாவிற்கு வருகை தந்திருந்த இலக்கிய ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
துணிந்தெழு சஞ்சிகையின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களைக் கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கலைத்துறையின் அடையாளமாக சபேசன் பங்கேற்பும், அவருக்கு வழங்கப்பட்ட விருதும் விழாவிற்கு கூடுதல் மெருகூட்டியது
-இலங்கையில் இருந்து ஜே. எம். பாஸித்
Advertisement

