sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

கோயில்கள்

/

அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்

/

அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்

அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்

அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்


ஜன 26, 2009

Google News

ஜன 26, 2009


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலவரலாறு : சிங்கப்பூரின் யூசுன் ஹவுசிங் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலாகும். இக்கோயில் சிங்கப்பூரின் மையப் பகுதியில் அருள்மழைப் பொலியும் ஆலயமாக அமைந்துள்ளது. சிங்கப்பூரின் இளஞ்சிவப்பு ஆலயம் என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோயில் 1930 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சுமார் 79 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பவாங் மலையிலிலுள்ள எஸ்டேட் பகுதியில் மிகவும் எளிமையான முறையில் துவங்கப்பட்டது. 1940 ஆண்டில் இக்கோயில் மாண்டாய் பகுதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 1996 ம் ஆண்டு, கோயில் நிர்வாகக்குழு தலைவர் திருமதி.கல்யாணி ராமசாமியின் தீவிர முயற்சிக்கு பின்னர் சுமார் 2000 சதுரடி பரப்பளவில் யூசுன் பகுதியில் பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. 1997 ம் ஆண்டு மே மாதம் 18 ம் தேதி இப்புதிய கோயிலுக்கான கட்டிடம் கட்டப்பட்டது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் இந்து கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. சிற்ப வேலைப்பாடுகளால் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் முழுவதும் தெய்வீகப் பேரொளி பரவிக் காணப்படுகிறது. அமைதியும் தெய்வீகத் தன்மையும் இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு அருகில், திருமணம், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடத்தப்படுவதற்காக இரண்டு பல்நோக்கு மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்கள், சுமார் 500 பேர் அமர்வதற்கு ஏற்றாற் போல் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறுபட்ட மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இக்கோயில் வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி, மதம், கல்வி, சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் இடமாகவும் இக்கோயில் செயல்பட்டு வருகிறது.

கோயில் முகவரி :  251 Yishun Avenue 3, Singapore - 769061.

தொலைப்பேசி : 67566374 / 67561208

பேக்ஸ் : 67566064

இ-மெயில் : contact {at} sreemahamariamman.org

இணையதளம் : http://sreemahamariamman.org


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us