/
உலக தமிழர்
/
ஆசியா
/
கோயில்கள்
/
அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி திருக்கோயில், வங்கதேசம்
/
அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி திருக்கோயில், வங்கதேசம்
அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி திருக்கோயில், வங்கதேசம்
அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி திருக்கோயில், வங்கதேசம்
டிச 25, 2010

ஆலய வரலாறு : வங்கதேசத்தில் உள்ள மிகப் பிரபலமான ஆலயங்களில் ஒன்று அருள்மிகு ஜெசோர்ஸ்வரி காளி தேவி ஆலயமாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வமாக காளி தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இக்கோயில் ஈஸ்வரிப்பூர் என்னும் கிராமத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. சிவன் பெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது சிதறிய சக்தியின் உடல் பாகங்கள் 51 சக்தி பீடங்களாக மாறின. இந்த சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் கருதப்படுகிறது. சக்தியின் உள்ளங்கை பாகம் விழுந்த இடத்தில் ஜெசோர்ஸ்வரி காளி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் வரலாற்றை ஆராய்கையில், பிரதாபாதித்யா மகாராஜா புதர் ஒன்றில் இருந்து தெய்வீக ஒளி வருவதையும், அதனை ஒரு சிறிய கல் மூடி இருப்பதையும் கண்டறிந்தார். அந்த ஒளி வந்த இடத்தில் மனித உள்ளங்கை போன்ற ஒரு கல் இருப்பதை கண்டார். அவ்விடத்தில் காளி தேவிக்கென் ஆலயம் அமைக்கும் பணியையும் பிரதாபாதித்யாவே மேற்கொண்டார். இக்கோயில் பிரம்மனால் படைக்கப்பட்டது என அனைவரும் நம்பு அளவிற்கு மிக நேர்த்தியான முறையில் கோயிலை வெகு சிறப்பாக கட்டினார். இக்கோயில் கட்டப்பட்ட சரியாக தெரியவில்லை. இருப்பினும் 100 கதவுகள் கொண்ட கோயிலாக இக்கோயிலை பிரதாபாதித்யா மகாராஜா கட்டியதாக கூறப்படுகிறது. பிரதாபாதித்யா மகாராஜாவிற்கு பிறகு வந்த மன்னர்களால் இக்கோயில் சிதைக்கப்பட்டது. இக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
வழிபாடு முறைகள் : நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலில் புரோகிதர்களால் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உச்சிகால பூஜை மட்டும் நடத்தப்படுகிறது. ஆனால் 1971ம் ஆண்டுக்கு முன் நாள்தோறும் 6 கால பூஜைகள் ஆகமவிதிப்படி நடத்தப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காளி பூஜையன்று கோயில் நிர்வாகத்தினரால் மிகப் பெரிய அளவில் கோலாகலமாக திருவிழா நடத்தப்படுகிறது. இந்த வருடாந்திர திருவிழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காளி தேவியை வழிபட்டு செல்கின்றனர்.
Advertisement