
ஹெறாத்து, ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெருநகரமாகும். ஹரி ஆற்றின் வளமான பள்ளத்தாக்கின் பகுதியில் அமைந்துள்ள மாகாணத் தலைநகரான ஹெறாத்தின் ஒரு நெடுஞ்சாலை கந்தகார் பெருநகரத்துடன் இணைக்கப்பட்டள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், ஹெறாத்திலிருந்து 817 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஹெறாத் பெருநகரில், அரண்மனை, மொசல்லா வளாகம் என பல வரலாற்றுத் தளங்கள் உள்ளன. மத்திய காலங்களில், கோர்சன் பேர்ல் எனும் நகரம், முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. அது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆப்கானியர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அவர்கள், 1717 ஆண்டுமுதல்-1736 வரையில், அப்சரிட்ஸ் நகரத்தை ஆண்டனர். பின்பு ஓடாகி படைகள் தாக்குதல் நடத்தி அந்நகரை கைப்பற்றியது. அடுத்து வந்த காலங்களில் நதீர் சா மறைவுக்குப்பின் 1747ல் அகமது சா துரானி ஆட்சியில் எழுச்சியடைந்ததால் ஆப்கானிஸ்தானின் இதய பகுதியாக மாறியது. மேலும், அது சில அரசியல் இடையூறுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்தது.1980 களில் சோவியத் யுத்ததின் போது பரவலான பகுதிகள் அழிவுக்கு ஆட்பட்டது, ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் காப்பாற்றப்பட்டன.
ஹெறாத்து நகரம், பண்டைய வர்த்தக மார்க்கமாக உள்ள மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது. ஹெறாத் நகரத்திலிருந்து ஈரான், துருக்மெனிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகளுக்கும் சாலை இணைப்புகள் இன்றும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. ஈரான் நுழைவாயில் என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தான் சுங்க வருவாய்துறை அதிகளவு சேகரிப்பதாக அறியப்படுகிறது. இந்த தலைநகரில் ஒரு சர்வதேச வானூர்தி தளமும் இருக்கிறது.
ஈரான், துருக்மெனிஸ்தான், மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தான் அருகருகே அமைந்ததால் ஹெறாத்து ஒரு மத்திய பிராந்தியமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் உயர்நிலை குடியிருப்புகள் அதிகளவில் காணப்படுகிறது.
ஹெறாத், பண்டைய காலகட்டத்தை சேர்ந்ததாகும் ஆனாலும், அதன் ஆரம்ப வயதை இதுவரை அறியப்படவில்லை. ( கிமு 550 -கிமு 330) காலங்களில் அக்கீமேனிட் பேரரசு ஆண்டுள்ளனர், சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹரைவா (பழைய பாரசிகர்கள்) இருந்தாதாக அறியபடுகிறது. மற்றும் பாரம்பரிய மூலங்களின்படி அதையொட்டிய பிராந்தியத்தை 'ஏரியா' என அழைக்கபடுகிறது. ஜோரோஸ்ட்ரியன் சமய நூலான அவெஸ்தாவில் ஹரோவியா என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டம், மற்றும் இந்நகரத்திற்கு இப்பெயர்பெற காரணம் இப்பகுதியில் ஓடும் பிரதான ஆற்றிலிருந்து தருவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தை கடந்து செல்கின்ற ஹரி ஆறு தற்கால ஹெறாத் நகரிலிருந்து தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் செல்கிறது.
Advertisement

