/
உலக தமிழர்
/
ஆசியா
/
சுற்றுலா தலங்கள்
/
பந்தே அமீர் தேசியப் பூங்கா, ஆப்கானிஸ்தான்
/
பந்தே அமீர் தேசியப் பூங்கா, ஆப்கானிஸ்தான்
அக் 21, 2025

பந்தே அமீர் தேசியப் பூங்கா (Band-e Amir) ஆப்கானிஸ்தான் நாட்டில் பாமியான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முதல் தேசியப்பூங்கா இது. ஆழமான ஆறும், பெரிய ஏரிகளும் இயற்கையான அணைப்பகுதியும் கொண்ட இடத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா பாமியான் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது. இப்பூங்காவிற்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதிக்கு வடமேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் 'யகவலாங்' நகருக்கு அருகே அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இப்பூங்கா ஆப்கானிஸ்தானின் முதல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அரசியல், சர்வதேச மற்றும் உள்நாட்டுப்போரின் காரணமாக 1960 களிலிருந்து இப்பூங்கா இடர்பாடுகளுக்கு உள்ளானது.
Advertisement

