/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் 10 ம் ஆண்டு அமீரக குறுநாடக விழா
/
துபாயில் 10 ம் ஆண்டு அமீரக குறுநாடக விழா
ஜன 19, 2026

துபாய்: அமீரக தமிழர்களின் தமிழ் மேடை நாடக ஆர்வத்தினை கடந்த பத்து வருட காலமாக தடையின்றி ஊக்குவிக்கும் ஒரு களமாக இயங்கி வருகிறது அமீரக குறுநாடக விழா.
வருடா வருடம் புது கதையம்சம் கொண்ட கதைகள், அறிமுக கதையாசிரியர்கள், புதிய இயக்குனர்கள், மேடையில் நடிக்கும் ஆர்வத்தில் பங்கு கொள்ள முன் வரும் 7 வயது முதல் 70 வயது வரை உள்ள கலைஞர்கள் என விழா களை கட்டும்.
இவ்வருடம், 25 க்கும் மேற்பட்ட கதைகள் பெறப்பட்டு, 12 தேர்ச்சி அடைந்து, கடந்த நவம்பர் 2 ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 2 மணி வரை நடை பெற்ற விழாவில் நாடகங்களாய் மேடையேறின.
ஐம்பது கால மேடை நாடக அனுபவம் வாய்ந்த டிவி வரதராஜன் நடுவராய் தலைமையேற்றார்.
முந்தினம் மாலை ரசிகர்களையும் இயக்குனர்களையும் சந்தித்து மனம் திறந்து தனது அனுபவங்களை பகிர்ந்து மகிழ்வித்தவர், நாடக விழா அன்று 12 நாடகங்களையும் கண்டு மதிப்பீடு செய்து அன்று மாலையே தன் கருத்துகளை தெரிவித்து பரிசுகளையும் அறிவித்தார்.
கூடுதல் சிறப்பு விருந்தினர்களாக கிரேசி மோஹன் குழுவை சேர்ந்த வாசு ஸ்ரீநிவாசன் மற்றும், பூர்ணம் விஸ்வநாதன் குழுவை சேர்ந்த மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 நிமிட கால அளவிலான நாடகங்களில் பங்கு கொண்டு, 12 வகையான 28 பரிசு கோப்பைகளுக்கு இவ்வருடம் 65 கலைஞர்கள் ஒரு நாடகத்திலும் 23 கலைஞர்கள் இரு நாடகங்களிலும் போட்டியிட்டனர்.
வெற்றியாளர்களின் விவரங்கள்:
1. பெறப்பட்ட முதல் குறுநாடக கதை வசனம்: கஸ்தூரி ராஜேஷ்( எங்கே என் நாட்கள்)
2. பெறப்பட்ட முதல் குறுநாடக பதாகை: பிரேமா ரவிச்சந்திரன் (டெரஸ்ட்ரியல்)
1. சிறந்த குறுநாடக பதாகை :
1. தேடல்
2. புரியா குறுநகை
2. சிறந்த உடை/ஒப்பனை:
1. புரியா குறுநகை
2. மகளிர் மட்டும்
3. சிறந்த அறிமுகம்:
நடிகை: சுஜனி ரனேத் ( மகளிர் காவல் நிலையம்)
நடிகை : சாந்தி சாய்ராம் (வொர்க் ஃப்ரம் ஹோம்)
இயக்குனர்: ரேவதி கிருஷ்ணா(மகளிர் காவல் நிலையம்)
கதை திரைக்கதை: வசந்தி ஆனந்த் (வொர்க் ஃப்ரம் ஹோம்)
4. சிறந்த மேடை வடிவமைப்பு:
1.குறுநாடகம்: மகளிர் காவல் நிலையம்
2.குறுநாடகம்: வொர்க் ஃப்ரம் ஹோம்
5.சிறந்த கதை,திரைக்கதை வசனம்
1. ஆசிஃப் மீரான் ( எல்லாப் புகழும்)
2. முகுந்தன் மாலன்/ மிருதுளா (கண்ணாடி குழந்தைகள்)
6. சிறந்த இசை
1. நெல்சன் பீட்டர் (சபாபதி 0.5)
2. ஆண்டனி ஹ்யூபர்ட் (பிணைப்பு)
7. சிறந்த குழந்தை நட்சத்திரம்
1. மிருதுளா (கண்ணாடி குழந்தைகள்)
2. அஜிதேஷ் ஆனந்த் (தேடல்)
8. சிறந்த குணச்சித்திர நடிப்பு
1. தனுஸ்ரீ கிருஷ்ணா (மகளிர் காவல் நிலையம்)
2. சாய்ராம் (வொர்க் ஃப்ரம் ஹோம்)
9. சிறந்த நடிகர்
1.சசிகுமார் ( எல்லாப் புகழும்)
2. கிருஷ்ணன் (சபாபதி 0.5)
10. சிறந்த நடிகை
1. ரூபா பிரபு கிருஷ்ணன் (எல்லாப் புகழும்/(பிணைப்பு)
2. பூர்ணி பாலாஜி (சபாபதி 0.5 / மகளிர் மட்டும்)
11. சிறந்த இயக்குனர்
1. சுரேஷ் பாபு (எல்லாப் புகழும்)
2. லலிதா ரமேஷன் (வொர்க் ஃப்ரம் ஹோம்)
12. சிறந்த குறுநாடகம் 2025
1. மகளிர் காவல் நிலையம்
2. வொர்க் ஃப்ரம் ஹோம்
நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த, ஆரார் யுடிலிட்டி மற்றும் கேபிடல் எஞ்சினியரிங் குழுமங்கள் நன் கொடை வழங்கி பெருமை சேர்த்தனர்.
வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பைகள், பங்கு கொண்டவர்கள், புரவலர்களுக்கு நினைவு சின்னம், மேலும், 10 ம் வருட சிறப்பு நிகழ்ச்சிக்கென காலையும் மாலையும் வந்திருந்த அனைவருக்கும் லட்டு, பங்கு கொண்ட இயக்குனர்களுக்கு பல அன்பளிப்புகள் என பலவும் அளித்து சிறப்பு சேர்த்தனர் ஏற்பாட்டாளர்கள்.
வரதராஜன் தன் சார்பில், நடக்க இருக்கும் தனது அடுத்த நாடகம் சார்பாய், இயக்குனர்களுக்கு இசை மும்மூர்த்திகள் வரைபடம் தந்து ஆச்சர்யமூட்டினார்.
நடுவருக்கும், புரவலர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கு நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் ஏற்பாட்டாளர்கள் ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் ரமா மலர்.
- துபாயிலிருந்து நமது வாசகர் அசோகன்
Advertisement

