/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
/
துபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
துபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
துபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
ஜூன் 17, 2024

துபாய் : துபாயில் அரிமா சங்கங்கள் பல்வேறு விதமான சேவைகளை செய்து வருகின்றன. பல நாட்டினர் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கங்களில் உறுப்பினர்களின் திறமைகளை உற்சாகப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
குறிப்பாக மனநிலை பிறழ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், திறன் வெளிப்பாட்டு விழாக்கள் முக்கியம் வாய்ந்தவை.
கடந்த 2023 வருடம் போதி அரிமா சங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருக்க தொடங்கப்பட்டது.
சர்வதேச அரிமா சங்க மத்திய கிழக்கு தொகுதியின் கீழ் இயங்கும், போதி அரிமா சங்கம், மனவளர்ச்சி உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்குள்ள மிகப்பல சிறப்பு திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணரும் நிகழ்வுகளை நடத்துவதும் பொது சேவை செய்யும் தருணங்களில் அவர்களை அதில் ஈடுபடுத்துவதும் நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த 15 ஆம் தேதியன்று, ஜி3 கேலக்சி குழுவின் துணையுடன் 'தரங்-சிம்ஃபனி ஆஃப் டேலண்ட்ஸ்' எனும் கருவில் உறுப்பினர்களின் இசை திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வு நடைபெற்றது.
துபாய் நாத் அல் ஷெபா பகுதியில் அமைந்துள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகடமி பள்ளி வளாகத்தில் மாலை 5 30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் இணைந்து, பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இசை நடன நிகழ்வாகும்.
மேலும், மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்ட உடைகளில் நவ நாகரீக அலங்கார நடை, பேச்சரங்கம், இவற்றை தொகுத்து வழங்குவதும் அக்குழந்தைகளே என பெரும் முயற்சியில் இதனை உருவாக்கி இருந்தனர்.
நிகழ்ச்சியினை கண்டு கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் அனைவரையும் உற்சாகப்படுத்திய அனைவருக்கும் போதி அரிமா சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement