/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபீர் மெடிக்கல் குழுமம் ஹஜ் யாத்திரை யாளர்களுக்கு மினாவில் அவசர மருத்துவ மையம் தொடக்கம்
/
அபீர் மெடிக்கல் குழுமம் ஹஜ் யாத்திரை யாளர்களுக்கு மினாவில் அவசர மருத்துவ மையம் தொடக்கம்
அபீர் மெடிக்கல் குழுமம் ஹஜ் யாத்திரை யாளர்களுக்கு மினாவில் அவசர மருத்துவ மையம் தொடக்கம்
அபீர் மெடிக்கல் குழுமம் ஹஜ் யாத்திரை யாளர்களுக்கு மினாவில் அவசர மருத்துவ மையம் தொடக்கம்
ஜூன் 05, 2025

ஜெத்தா - இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து, ஹஜ் யாத்திரை யாளர்களுக்கு முக்கியமான மருத்துவ சேவைகளை வழங்கும் பணியில் அபீர் மெடிக்கல் குழுமம் முன்னணியில் நிற்கிறது. சவூதி சுகாதார அமைச்சகம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஆகியவற்றின் அனுமதியுடன் அமைக்கப்பட்ட அவசர மருத்துவ சிகிச்சை மையம், ஹஜ் பருவத்தின் முழு காலத்திலும் ஹாஜிகளை சேவை அளிக்க திங்கட்கிழமை இரவில் இருந்து இயங்கத் தொடங்கியது.
மினாவின் தொடர் எண் 5505, தெரு எண் 520 இல் அமைந்துள்ள அபீர் மருத்துவ மையம் 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்ஸ்கள், அவசர பணியாளர்கள் மற்றும் மருந்தியலாளர்கள் கொண்ட குழுவினர் முழு நேரம் பணியில் ஈடுபட உள்ளனர். அவசரங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சிகிச்சை தேவைப்படும் ஹாஜிகள், மக்காவில் உள்ள அபீரின் சவூதி நேஷனல் ஹாஸ்பிடலில் அனுப்பப்படுவர்.
மினாவில் ஹாஜிகள் வந்து சேரும் நேரத்தில் இருந்து ஹஜ் முடியும் வரை இந்த மருத்துவ மையம் முழுமையாக இயங்கும்.
பருவநிலை இவ்வாண்டும் ஹாஜிகளுக்கு ஒரு சவாலாக இருப்பதற்கான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் வெப்பவாதம் மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பு போன்ற சிக்கல்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், காயம், சுவாசக் கோளாறுகள், காய்ச்சல், உடல் சோர்வு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, உடல் வலி மற்றும் தொற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சனைகளுக்கும் நிபுணர் பராமரிப்பு வழங்கப்படும்.
2024ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திலும் அபீர் மெடிக்கல் குழுமம் மினாவில் சேவை செய்த அனுபவம் கொண்டது; அப்போது ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
அலுங்கல் முகம்மது, அபீர் மெடிக்கல் குழுமத்தின் தலைவர், 'மினாவில் ஹாஜிகளை இரண்டாவது வருடமாகச் சேவையளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது மக்கா பிராந்தியத்தில் உள்ள எங்கள் மருத்துவமனையின் தொடர்ச்சியாகும்,' என்றார்.
ஹஜ் காலத்தில் சுகாதார ரீதியாக மற்றும் முறையாக நடைபெற சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அபீர் முழுமையான ஆதரவு அளிக்கிறது,' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- நமது செயதியாளர் M சிராஜ்
Advertisement