/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
/
குவைத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
குவைத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
குவைத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
ஜூன் 04, 2025

குவைத்: குவைத்தில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் முகம்மது உமர் தலைமை வகித்தார். தொடக்கமாக அப்துல்லா அகமது இறைவசனங்களை ஓதினார். குவைத் இஸ்லாமிய விவகாரத்துறையின் அலுவலர் முகம்மது அலி, டோன் போஸ்கோ பள்ளிக்கூட முதல்வர் அருட்தந்தை ஜேம்ஸ் டுஸ்கனோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கல்வி மற்றும் பயிற்சி மைய அதிகாரி பைசி ரஹ்மான் உள்ளிட்ட பலர் கல்வி தொடர்பாக விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனிருத் விமல் சிவன், அனம் அன்வர் காஜி ஆகிய இருவரும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் சிறப்பிடங்கள் பெற்றவர்களும் பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement