/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கத்தின் தொடர் சேவை
/
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கத்தின் தொடர் சேவை
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கத்தின் தொடர் சேவை
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கத்தின் தொடர் சேவை
ஜூன் 03, 2025

மனாமா: பஹ்ரைன் நாட்டின் ஈஸா டவுன் பகுதியிலுள்ள குறைந்த வருமானத்தில் பணி புரியும் 75 பெண் தொழிலாளர்களுக்கு 'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கம், பழங்கள், பழச்சாறு, தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்க்குகள், கோப்பைகள், கண்ணாடித் தட்டுகள் மற்றும் தொப்பிகளை வழங்கியது.
'ரீச் தி அன்ரீச்ட்' முயற்சியின் ஒரு பகுதியான இந்த சேவையின் நோக்கம், ஆண்டு முழுவதும் பஹ்ரைனைச் சுற்றியுள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு உதவுவதும், உறுதுணையாக இருப்பதும் ஆகும்.
'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' பிரதிநிதிகள் சையத் ஹனீஃப், ஷஃபீக் மலபுரம், ஆயிஷா நிஹாரா மற்றும் பிரியா நிஷா ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement