/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்
/
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்
பிப் 07, 2026

துபாயில் கிரீன் குளோப் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்
துபாய் : 'ரத்த தானம் உயிர் தானம்' என்ற சொல்லாடலை உயிர்ப்பிக்கும் வண்ணம், நம் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சமூகநல பணிகளை செய்து வரும், க்ரீன் குளோப் அமைப்பின் முன்னெடுப்பில், கடந்த வருடங்களை போல இந்த வருடமும் 2026 ஆம் ஆண்டின் முதற்கட்ட ரத்த தான முகாம் துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் நடைபெற்றது.
இதில் சுமார் 128 நபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள். குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும், குறிப்பாக ரசூல், சிந்தா, சாபீர், பீர் முஹம்மது உள்ளிட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் க்ரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
--- துபாயில் இருந்து நமது தினமலர் வாசகர் சிவசங்கர்
Advertisement