/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருள் வினியோகம்
/
உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருள் வினியோகம்
உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருள் வினியோகம்
உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருள் வினியோகம்
பிப் 06, 2026

பாலைவனத்தில் உணவின்றி தவித்த தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்கு உணவு பொருள் விநியோகித்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
ஜித்தா புறநகர் பகுதியான அல்கும்ராவில்தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 14 பேர் உண்ண உணவின்றி 5 முதல் 7 மாத சம்பளமின்றி சிறை போன்ற ஒரு முகாமில் தவித்துக் கொண்டிருப்பதாக IWF தொண்டரணிசெயலாளர் மங்களக்குடி தாஹா ரசூலுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக ஜித்தா மண்டல தலைவர் கீழை இர்ஃபான் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் இருவர் மட்டும் இந்திய தூதரகத்தில் நடந்த ஓபன் ஹவுஸில் தமது புகாரை பதிவு செய்தார்கள்.
இதற்கான வாகன வசதி, உணவு, தூதரக வழிகாட்டல் ஆகியவற்றை IWF நிர்வாகிகள் பனங்காட்டூர் அப்துல் ஹலீம், நெல்லிக்குப்பம் அசரப் ஆகியோர் செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்களை ஒரு சகோதரிடம் பெற்று கடந்த 30-1-26 நள்ளிரவுமங்களக்குடி தாஹா ரசூல் அவர்களின் இடத்திற்கு சென்று ஒப்படைத்தார்.
கடந்த 1-2-26 அன்று IWF நிர்வாகிகள் கீழை இர்ஃபான், அப்துல் மஜீத், சையது இஸ்மாயில், அப்துல் ஹலீம், தாஹா ரசூல் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து விவரங்களை கேட்டறிந்து சட்ட ஆலோசனைகளை வழங்கி ஆறுதல் சொன்னார்கள்
இதற்கான புகார் மற்றும் தூதரக வேலைகளை முடித்துக் கொடுத்து அவர்களை ஊருக்கு அனுப்பும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.
Advertisement

