sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

சவுதி அரேபியா அசீர் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா

/

சவுதி அரேபியா அசீர் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா

சவுதி அரேபியா அசீர் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா

சவுதி அரேபியா அசீர் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா


பிப் 05, 2026

Google News

பிப் 05, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சவுதி அரேபியா அசீர் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, தைத் திங்கள் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியாவின் கமிஷ் நகரில் அசீர் தமிழ் சங்கம் பாரம்பரிய ஒளியோடு நடைபெற்றது.
விழா தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, தொடர்ந்து வண்ணமயமான கோலங்கள் இடப்பட்டன. விழா அரங்கில் சர்க்கரைப் பொங்கல் வைத்து, பெண்கள்-ஆண்கள் இணைந்து தமிழர் மரபை பறைசாற்றும் கும்மி நடனத்துடன் விழா இனிதே ஆரம்பமானது.
தலைவாழை இலை போட்டு உணவுகள் அன்புடன் பரிமாறப்பட்டன. அதன் பின்னர் தமிழரின் வீர விளையாட்டான உறியடி உள்ளிட்ட சிறுவர்- பெரியவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அரங்கின் உள்ளே பெண்களுக்கு கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, வெற்றியாளர்களுக்கு அழகிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாலையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.
விழாவின் இடையே, இவ்வாண்டு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ-மாணவியருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது அனைவரையும் நெகிழ வைத்த தருணமாக இருந்தது. பின்னர் நன்றியுரை வழங்கப்பட்டு, இந்திய மற்றும் சவூதி தேசிய கீதத்துடன் விழா மகிழ்ச்சியாக நிறைவுற்றது.
இந்த விழாவிற்கு அபீர் மருத்துவக் குழுமம் மற்றும் நண்பர்கள் சிறப்பு சேர்த்தனர். மேலும் விழாவின் அழைப்பை ஏற்று தெலுங்கு மற்றும் கேரளா நண்பர்கள், லானா பன்னாட்டு இந்திய பள்ளியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை கௌரவித்தனர்.
விழாவின் முழுமையான ஏற்பாடுகளையும் அசீர் தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.
- ஜெத்தாவில் இருந்து நமது செய்தியாளர் சிராஜ்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us