/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் அயல்நாட்டுத் தமிழர் இந்தியர் சங்கம் (NRTIA) சார்பில் இரத்ததான முகாம்
/
ரியாத்தில் அயல்நாட்டுத் தமிழர் இந்தியர் சங்கம் (NRTIA) சார்பில் இரத்ததான முகாம்
ரியாத்தில் அயல்நாட்டுத் தமிழர் இந்தியர் சங்கம் (NRTIA) சார்பில் இரத்ததான முகாம்
ரியாத்தில் அயல்நாட்டுத் தமிழர் இந்தியர் சங்கம் (NRTIA) சார்பில் இரத்ததான முகாம்
செப் 09, 2025

ரியாத்; சவூதி அரேபியாவின் ரியாத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அயல் நாட்டுத் தமிழர் இந்தியர் சங்கம் (NRTIA) மற்றும் சவூதி அரேபியா திமுக அயலக அணி இணைந்து, “நம் தேசத்தின் பெருமை, நம் ஒற்றுமையில் வெளிப்படும். என்பதை பறைசாற்றும் விதமாக ”கிங் அல் ஃபஹத் மருத்துவமனை ஒத்துழைப்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.
இந்த முகாம், இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், ரியாத்தில் வாழும் பல்வேறு சமூக மக்களுக்கும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் முக்கியமான முயற்சியாக இருந்தது.
NRTIA அமைப்பாளர் டாக்டர் சந்தோஷ் முன்னிலை வகிக்க டாக்டர் சாஜித் (செயலாளர் NRI மருத்துவ பிரிவு NRTIA) முகாமை துவக்கி வைத்தார்.
*முகாம் முழுவதையும் ஒருங்கிணைத்த துணை அமைப்பாளர்கள் அப்துல் ரகுமான், வாசிம் ராஜா, உறுப்பினர் சேக் முஹம்மது சபியா பானு ஆகியோர் ஒருங்கிணைக்க * அயலக அணியின் தலைவர் ஆயப்பாடி ஜாஹிர் உசென், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனம், செயலாளர் சாமித்துரை, அருமுகம் பொருளாளர், மேலூர் ஷாஜஹான் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மோஹமட் மன்சூர் இளைஞர் செயலாளர்ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பைச் செய்தனர்.
*எண்ணிக்கையில் அதிகமானோர் இந்த முகாமில் இரத்த கொடை அளிக்க பங்கேற்ற அனைவருக்கும் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட், ஒருங்கிணைப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், மற்றும் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும், சவூதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும், சுகாதார விழிப்புணர்வின் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
---நமது செய்தியாளர், எம்.M Siraj, ஜெத்தா .
Advertisement