sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

/

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி


ஜன 18, 2026

Google News

ஜன 18, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கம்பன் மீரான் எழுதிய 'அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்' என்கிற நூல் அறிமுக விழா இணைய வழியாக நடத்தப்பட்டது.


இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் இலங்கை பிரதிநிதி காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் முன்னிலை வகித்தார். முகம்மது ஆதில் இறை வசனங்களை ஓதினார். முகுந்தன் மன்னர் மன்னர் திருக்குறள் வாசித்தார்.


இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் ஜனாப். மு. ஷாகுல் ஹமீது, சுதந்திர போராட்ட வீரர் கக்கன் பேத்தி மீனாட்சி விஜயகுமார், பரமக்குடி கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்ல, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் சே.முனியசாமி, பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம், பேராசிரியை நசீமா, அழகன்குளம் கவிஞர் ஹைருன்னிஷா, கீழக்கரை அபுல் ஹசன், இலங்கை சுபையிர் அஹில் முஹம்மத், செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செ. மாதவன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி மன்னர் மன்னன், அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், முதுகுளத்தூர் ஃபக்ருதீன் அலி அஹமது உள்ள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூல் குறித்த ஆய்வுரையை பகிர்ந்து கொண்டனர்.


நூலாசிரியரான கம்பம் மீரான் ஏற்புரையாற்றினார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தொகுப்புரையாற்றினார். இதில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- துபாயிலிருந்து நமது வாசகர் இர்ஃபான்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us