/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இந்திய பாரம்பரிய பாய்மர கப்பல்
/
மஸ்கட்டில் இந்திய பாரம்பரிய பாய்மர கப்பல்
ஜன 18, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : இந்தியாவின் பாரம்பரிய பாய்மரக்கப்பல் கவுன்தின்யா குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலுக்கு இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஓமன் பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரி அஸ்ஸான் பின் காசிம் அல் புஸைதி, இந்திய தூதரக அதிகாரி தவிசி பெஹல் பாண்டே ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஓமன் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மஸ்கட்டில் இருந்து நமது வாசகர் மனோகரன்
Advertisement

