/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஜெத்தாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெத்தாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜெத்தாவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அக் 23, 2025

இந்திய தூதரகத்தின் தலைமையில், இந்திய டாக்டர்ஸ் மெடிக்கல் ஃபோரம் (IDMF) இணைந்து, ஜெத்தா , இந்திய இன்டர்நேஷனல் பள்ளி (பெண்கள் பிரிவு) அரங்கத்தில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி ஒரு சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய துணை தூதர் பாஹத் அஹ்மத் கான் சூரி அவர்களின் முன்முயற்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பெண்களின் உடல்நலம் மற்றும் மார்பகப் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிதல் குறித்து இளைய தலைமுறைக்கும் சமூக பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்வுக்கு IDMF தலைமை குழுவினர் — டாக்டர் அஷ்பாக் மனியார் (தலைவர்), தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் ரேவதி (துணைத் தலைவர்), டாக்டர் முகமது அப்துல் சலீம் (பொது செயலாளர்), டாக்டர் பார்ஹீன் தாஹா (இணைச் செயலாளர்) மற்றும் டாக்டர் காஜா யாமீன் உத்தீன் (பொது தொடர்பு அலுவலர்) ஆகியோர் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கினர்.
ஃபெஹ்மிமா கான் சூரி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். டாக்டர் ரேவதி, பெண்களின் உடல்நலம் மற்றும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் பெண்கள் பள்ளி துணை முதல்வர் ஃபரஹதுன்னிசா வரவேற்புரையாற்றினார். மரியாதை மற்றும் நன்றியின் அடையாளமாக ஃபெஹ்மிமா கான் சூரி, அபிதா கத்தூன், மற்றும் டாக்டர் ரேவதி ஆகியோருக்கு மலர் கொத்துகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
டாக்டர் ரேவதி IX முதல் XII வகுப்பு மாணவிகளுக்காக விழிப்புணர்வு அமர்வு நடத்தினார். மார்பகப் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறிவதற்கான எளிய நடைமுறைகள், எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணும் வழிகள் ஆகியவற்றை விளக்கமாக கூறினார். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் தயாரித்த சிந்தனையைத் தூண்டும் நாடகம் மற்றும் இனிமையான பாடல் நிகழ்த்தப்பட்டன; இவை இரண்டும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முக்கியத்துவத்தை படைப்பாற்றலுடன் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஒரு கேள்வி-பதில் அமர்வும் நடைபெற்றது.
“முன்னேற்பாடு சிகிச்சையை விட மேல்” என்ற பழமொழியை வலியுறுத்தும் வகையில், இந்த நிகழ்வு மாணவிகளுக்கு பெண்களின் உடல்நலம், மார்பகப் புற்றுநோய் தடுப்பு, தொடக்கக்கட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த பயனுள்ள அறிவை வழங்கியது.
நிகழ்ச்சி முடிவில் IX-XII வகுப்புகள் பெண்கள் பிரிவு தலைமை ஆசிரியர் சதிகா தரண்ணும் நன்றி கூறினார்.
“விழிப்புணர்வே தடுப்பின் முதல் படி; இன்று பெறும் அறிவே நாளைய பாதுகாப்பு.” என்ற வலுவான செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
- சவூதியிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement
Advertisement
Advertisement

