/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் சித்ராவின் இசை நிகழ்ச்சி
/
குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் சித்ராவின் இசை நிகழ்ச்சி
குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் சித்ராவின் இசை நிகழ்ச்சி
குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் சித்ராவின் இசை நிகழ்ச்சி
டிச 18, 2025

குவைத்தில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் சித்ராவின் இசை நிகழ்ச்சி குவைத், டிசம்பர் 12: தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் (TEF), குவைத் சார்பில், 26 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பிரபல இசைக் குயில் பத்மபூஷண் கே.எஸ். சித்ரா பங்கேற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி “ஹார்மோனிக் ஹொரைசன்ஸ்” (Hormonic Horizons) அஹமதி பகுதியில் உள்ள DPS ஆடிட்டோரியத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. நிகழ்ச்சியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். TEF 2025 ஆண்டறிக்கையை பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் சமர்ப்பித்தார். நிதி அறிக்கையை பொருளாளர் அருண் கோல்டன் விளக்கினார். TEF தலைவர் ராஜா தலைமையுரையில் குழுமத்தின் சமூகப் பங்களிப்புகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து TEF 2025 நிர்வாகக் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின் TEF 2026 புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இசை நிகழ்ச்சியில், பத்மபூஷண் கே.எஸ். சித்ராவின் இனிமையான பாடல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அவருடன் நிஷாத், அம்ருதா, ரூபா, சத்திய பிரகாஷ் உள்ளிட்ட பாடகர்கள் மற்றும் இசைக்குழு கலந்து கொண்டு இசை விருந்தளித்தனர். குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழும நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் சுப்ரமணியன் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அற்புதமான மற்றும் சுவையான இரவு உணவு பரிமாறப்பட்டது.
Advertisement

