/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2026 கொண்டாட்டம்
/
ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2026 கொண்டாட்டம்
ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2026 கொண்டாட்டம்
ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2026 கொண்டாட்டம்
ஜன 05, 2026

ஜெத்தா இந்திய துணைத் தூதரகம், ஜெத்தா இந்திய சமூகத்தின் ஸ்டீயரிங் கமிட்டியுடன் இணைந்து, 2026 ஜனவரி 1 அன்று துணைத் தூதரக வளாகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2026 கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்வு, இந்திய வம்சாவளியினரை ஒன்றிணைத்து, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்தியது.
இந்த விழா, இந்தியா மற்றும் சவூதி அரேபிய அரசின் தேசிய கீதங்கள் இசைக்கப்படுவதுடன், தொடங்கியது. இது இரு நாடுகளுக்கிடையேயான நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் நீடித்த ஒத்துழைப்பை உறுதிபடுத்தியது .
இந்த நிகழ்வில் ஜெத்தா இந்திய துணைத் தூதர். ஃபஹத் அகமது கான் சரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திய ஒரு மனதைக் கவரும் நிகழ்வாக, அவர் குழந்தைகளுடன் சேர்ந்து சாண்டா தொப்பிகளை அணிந்தார்.
ஜெத்தா இந்திய சமூகத்தின் ஸ்டீயரிங் கமிட்டியின் சார்பில், பொறியாளர் காஜா மைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதினரை உள்ளடக்கிய இந்திய சமூக உறுப்பினர்களின் சிறப்பான பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வண்ணமயமான,திறம்பட வடிவமைக்கப்பட்ட நடன நிகழ்ச்சிகளும், மனதை கவரும் பாரம்பரிய மற்றும் நவீன பாடல்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது . சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான மற்றும் திருவிழா சூழலை உருவாக்கியது.
இந்திய வணிக மற்றும் தொழில்முறை வலைப்பின்னல் (IBPN) சார்பில், விஜய் சோனி மற்றும் டாக்டர் மிர்சா குத்ரத் நவாஸ் பேக் ஆகியோர், இந்திய சமூகத்திற்கான புதிய வணிக வாய்ப்புகள் குறித்து உரையாற்றினர். IBPN-ன் நோக்கம் மற்றும் பார்வையை விளக்கி, தொழிலதிபர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்க விரும்புவர்களை இந்த வலைப்பின்னலில் இணைந்து, கூட்டு வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்த கொண்டாட்டங்கள், தலைமுறைகளை கடந்த ஜெத்தா இந்திய சமூகத்தை ஒன்றிணைத்த “பல்வேறு தன்மையில் ஒற்றுமை” என்ற கருத்தை அழகாக வெளிப்படுத்தின. இந்த நிகழ்வு, பகிர்ந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் கலாச்சார பண்பாட்டு பெருமையை கொண்டாடும் மகிழ்ச்சியான மேடையாக இருந்து, ஒற்றுமையும் சகோதரத்துவமும் வளர பெரிதும் உதவியது.
ஜெத்தா இந்திய சமூகத்தின் ஸ்டீயரிங் கமிட்டியினர் இந்திய துணைத் தூதரகம், சமூக உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களின் உற்சாகமான ஆதரவு மற்றும் செயலில் ஈடுபாட்டுக்காகவும் அவர்களின் ஒத்துழைப்பு இந்த கொண்டாட்டங்களின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கூறி நன்றி தெரிவித்து கொண்டனர்
- சவூதியிலிருந்து நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்
Advertisement

