/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் தூதரக சேவை சிறப்பு முகாம்
/
லெபனானில் தூதரக சேவை சிறப்பு முகாம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் புத்த பூர்ணிமாவையொட்டி சீக்கியர்களின் தூய ரவி தாஸ் ஜி குருத்வாராவில் தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார். முன்னதாக குருத்வாராவில் இந்திய தூதர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து நடந்த தூதரக சேவைக்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றனர். அப்போது பேசிய தூதர், இந்திய சமூகத்தினருக்கு தூதரகம் எல்லாவிதமான சேவைகளையும் வழங்க தயாராக இருக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement