
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான் : ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இந்திய தூதரகம் மற்றும் இந்திய கலாச்சார மையத்தின் ஆதரவுடன் நகரிஸ்தன் அருங்காட்சியத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் உலக அமைதி, சகிப்புத்தன்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை தொடர்பான ஓவியங்கள் இடம் பெற்றன. இந்த ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற ஓவியர்களுக்கு இந்திய தூதர் ருத்ரா கௌரவ் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்த ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இந்திய கலாச்சார மையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement