/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம்
/
கத்தாரில் தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம்
அக் 25, 2025

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் மகாகவி மன்றம் இணைந்து நடத்திய “தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம்” கத்தாரில் தோஹாவில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தலைப்பு “இல்லறம் சிறக்கப் பெரிதும் உதவுவது கணவனா..? மனைவியா..?” எனும் கேள்வியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வை முனைவர் வாசுகி சத்தியபாபு தலைமை தாங்கி நடத்தினார்.
நகைச்சுவை மற்றும் சிந்தனையுடன் கூடிய பேச்சுகள் மூலம் நிகழ்ச்சி முழுவதும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியும், சிந்தனையும் ஏற்படுத்தியது. கத்தாரில் உள்ள தமிழ் சமூகத்தினரை சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை மேலும் சிறப்பாக்கினர்.
பேச்சாளர்களாக தொல்காப்பியன், நாகம்மை, இம்திஷா, அ. முகம்மது பாக்கர், வைரஞ்சனி, சாந்தினி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக சுஜி விஜய்குமார் பணியாற்றினார்.
நிகழ்ச்சி முடிவில், கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கத்தாரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்டுகள், பட்டிமன்றத்தில் கலந்து கொண்டவர்களில் இருந்து மூன்று பேருக்கு குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன.
Advertisement

