/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
/
அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
அமீரக காயிதே மில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு
ஏப் 29, 2025

அபுதாபி: பல்வேறு சமூக , சமுதாய நலப் பணிகளை செய்து வரும் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தக்பீர் முழக்கத்துடன் தேர்வு செய்யப்பட்டனர்.
விழாவின் தொடக்கமாக வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். ல்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரை ஆற்றினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவராக திருப்பனந்தாள் முஹம்மது தாஹா, பொதுச் செயலாளராக இராமநாதபுரம் எம் எஸ் ஏ பரக்கத் அலி, பொருளாளராக லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கௌரவ தலைவராக குத்தாலம் லியாக்கத்தலி , மூத்த ஆலோசகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவர் குழுமங்களின் சேர்மன் டாக்டர் ஜாகிர் ஹுசைன் , கீழக்கரை முகம்மது சலீம், அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை HM.முஹம்மது ஜமாலுதீன், அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துணைத் தலைவர்களாக ஆவை ஏ எஸ் முஹம்மது அன்சாரி , கீழக்கரை எஸ் கே எஸ் ஹமீதுர் ரஹ்மான் , பெரியபட்டினம் ஹாஜி அபுதாஹிர் பைஜி மற்றும் கீழக்கரை முஹம்மது மஃரூப் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைப் பொதுச்செயலாளராக வழுத்தூர் மக்கி பைசல், நிர்வாக செயலாளராக மேலக்காவேரி அப்துல் ஜமீல் ஜெஃப்ரி , மின்னணு ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு (IT Wing) செயலாளராக முஹம்மது கபீர், துணைப் பொருளாளர் மற்றும் துபாய் மண்டல செயலாளராக கீழக்கரை முஹம்மது காமில், துபாய் மண்டல துணைச் செயலாளரக லால்பேட்டை கிஃபாயத்துல்லாஹ், அபுதாபி மண்டல செயலாளராக ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், துணைச் செயலாளராக காதர் மீரான் பைஜி , அல் அய்ன் மண்டல செயலாளராக இராமநாதபுரம் எம்எஸ்ஏ தையூப் அலி , சார்ஜா மண்டல செயலாளர் மற்றும் வடக்கு அமீரகங்களின் அமைப்புச் செயலாளராக ஆடிட்டர் அஞ்சுக்கோட்டை அப்துல் ரசாக் , அஜ்மான் மண்டல செயலாளராக மதுக்கூர் முகம்மது ஹிதாயத்துல்லாஹ், கொள்கை பரப்புச் செயலாளராக கவிஞர் வழுத்தூர் முஹைதீன் பாஷா, சமூக நலத்துறை செயலாளராக அய்யம்பேட்டை இப்ராஹிம் அஹமது தர்வேஷ் , மக்கள் தொடர்பு செயலாளராக மேலக்காவேரி சாதிக் பாஷா , துணைச் செயலாளராக பசுபதி கோயில் சாதிக் ஆகியோரும், துபாய் மண்டல மார்க்கத்துறை செயலாளராக காயல்பட்டினம் சுலைமான் மஹ்லரி ஆலிம், அபுதாபி அல்அய்ன் மண்டல மார்க்கத் துறை செயலாளராக காயல் ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி, ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளராக திண்டுக்கல் ஜமால் முஹம்மது , அபுதாபி மண்டல மார்க்கத்துறை துணைச் செயலாளராக வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலி, அபுதாபி மண்டல விழா குழு செயலாளராக லால்பேட்டை சிராஜ் , துபாய் மண்டல விழா குழு செயலாளராக மாங்குடி நதீர், சோசியல் மீடியா செயலாளராக மங்கலம்பேட்டை பஜிலுல் இலாஹி, துபாய் மண்டல விழா குழு செயலாளராக வேதாளை முகைதீன் ஆலிம், தேரா தமிழ் பஜார் அல்பரகா செயலாளராக பனைக்குளம் முஹம்மது இப்ராஹிம், அல்முத்தினா பகுதி செயலாளராக வண்ணாங்குண்டு தைபுல்லா, ஹோர் அல் அன்ஸ் பகுதி செயலாளராக ஏர்வாடி முஹைதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை முஹம்மது ரிபாத் , அஸ்கர் அலி ,சுல்தான் முஹம்மது , முஹம்மது சிராஜுல் ஹக், ஜஸ்முல்லா, ஆசாத் அலி , அதிரை வழக்கறிஞர் முஹம்மது தாரிக், ஆதம் ஷா லால்பேட்டை அஸ்கர் அலி ,ஆஷிக் அலி,இம்ரான்,இம்தியாஸ் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஏற்புரை மற்றும் கருத்துரையாற்றினர். நிறைவாக முஹம்மது கபீர் ரிபாயி நன்றி உரையாற்ற கலீல் ரஹ்மான் பிலாலியின் சிறப்பான துஆவோடு இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement