/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி
/
ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி
ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி
ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி
டிச 07, 2025

ஷார்ஜா: ஷார்ஜா ஹவுஸ் ஆப் விஸ்டம் நூலகத்தில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியானது பாலஸ்தீன கவிஞரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கையை விளக்கும் வகையில் ஆறு பிரிவுகளாக இடம் பெற்றுள்ளது. இதில் அவர் எழுதிய கையெழுத்து பிரதிகள், நூல்கள், பயன்படுத்திய இசைத்தட்டுகள், காதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரபு நாட்டு இலக்கியத்தின் மிகவும் முக்கியமான கவிஞராக மஹ்மூது தர்விஸின் வாழ்க்கை குறித்து பல்வேறு நாட்டினரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை பார்வையிடலாம். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.
-- ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் அப்பாஸ்
Advertisement