/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26-வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின கொண்டாட்டம்
/
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26-வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின கொண்டாட்டம்
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26-வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின கொண்டாட்டம்
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 26-வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின கொண்டாட்டம்
டிச 07, 2025

ஜெத்தா தமிழ் சங்கத்தின் 26 வது ஆண்டு கலை மற்றும் குழந்தைகள் தின விழா இந்திய தூதரக வளாகத்தில் நடைபெற்றது. விழாவானது முகமது ஷராஃபின் கிரஅத் ஓதுதலுடன் இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பயிற்சி மையத்தில் பயிலும் சிறுவர், சிறுமிகளின் திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மழலைத் தமிழில் குழந்தைகள் திருக்குறளை ஒப்புவித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
பயாஸ் விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். அல் அமான் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் பெருமைகளையும் அதன் செயல் திறன்களையும் விவரித்தார்.அதைத் தொடர்ந்து தமிழ் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் நோக்கம் குறித்து திட்ட விளக்க உரையை செந்தில் ராஜா அவர்கள் விவரித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதரக அதிகாரி பாஹத் அஹமத் சூரி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவரைக் கௌரவிக்கும் விதமாக மூர்த்தி பூங்கொத்து வழங்க, ஜெய்சங்கர் பொன்னாடை அணிவித்தார். பிறகு இந்திய துணைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி தமிழ் பயிற்சி மையத்தின் தன்னார்வல ஆசிரியர்களுக்கு ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் நினைவு பரிசுகளை வழங்கினார்..
இந்திய பன்னாட்டு பள்ளியின் துணை முதல்வர் பாராஹ் மசூத்தும், அல்வருது பன்னாட்டு பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரியும், IDMF துணை தலைவர் டாக்டர் ரேவதியும், இந்திய பன்னாட்டு பள்ளி நிர்வாக கமிட்டி ஹேமா ராஜாவும், நிர்வாக குழு உறுப்பினர் ஜூபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. உஷா சரவணனின் நடன அமைப்பில் அரங்கேறிய பரதநாட்டியம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது, ரஸ்னி ஸ்ரீஹரியின் வடிவமைப்பில் நடைபெற்ற சிறுவர் மற்றும் சிறுமியர்களின் ஃப்யூஷன் (Fusion) நடனங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்ரீரஞ்சனி, பானுமதி சரவணன் ஆகியோரின் நடன அமைப்பில் குழந்தைகள் வழங்கிய துடிப்பான நடனங்கள் அரங்கத்தை அதிரச் செய்தது.
அனைத்து தமிழ் பயிற்சி மைய ஆசிரியர்களையும் இணைத்து, ஜெயஸ்ரீ, தாட்சாயணி இணைந்து வழங்கிய ஒயிலாட்ட நடனம் அனைவரையும் கவர்ந்த தாகவும், பாராட்டுக்குரியதாகவும் இருந்தது. சஞ்சு குருவின் பயிற்சியில் மாணவர்கள் நிகழ்த்திய சிலம்பாட்ட சாகசங்களும், அஹமது பாஷா நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக தமிழ் பயிற்சி மையத்தின் அல்லி , மல்லிகை மற்றும் சூரிய காந்தி வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்ற பல்சுவை நடனங்கள் மற்றும் நாடகங்கள் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.
தன்னார்வல தமிழ் பயிற்சி மைய ஆசிரியர்களின் உழைப்பும் திறமையும் தமிழ் பயிற்சி மைய குழந்தைகளின் மூலம் உணர முடிந்தது. ஜெத்தா தமிழ் சங்கம் இரு வருடங்களாக தமிழ் பயிற்சி மையம் அமைத்து நமது குழந்தைகளுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறையை கற்பிப்பது இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய காரணமாக அமைந்தது.
நிகழ்ச்சிக்கு பொருள் உதவி வழங்கி உறுதுணையாக இருந்த அனுசரணையாளர்களை ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக காஜா மொய்தீன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இந்த நிகழ்ச்சியை அகமது பாஷா, பதிலா காஜா மொய்தின் தொகுத்து வழங்கினர். ஹேமா ராஜா, ஜெயஸ்ரீ மூர்த்தி கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். எழில் மாறன் நன்றி உரை வழங்க ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும் விழா வெற்றிகரமாக நடந்து இனிதே முடிவுற்றது.
- ஜெத்தாவிலிந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement

