
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் இந்திய தூதரகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது : காந்தியடிகள் போதித்த அமைதி, உண்மை, அகிம்சை உள்ளிட்டவை இந்த காலத்துக்கு மட்டுமல்லாமல் எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்று காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement