sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

இந்தியா-சவுதி தொடர்புகள் உறுதிப்படுத்தும் IBPN

/

இந்தியா-சவுதி தொடர்புகள் உறுதிப்படுத்தும் IBPN

இந்தியா-சவுதி தொடர்புகள் உறுதிப்படுத்தும் IBPN

இந்தியா-சவுதி தொடர்புகள் உறுதிப்படுத்தும் IBPN


ஜன 04, 2026

Google News

ஜன 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெத்தா: 2026 ஆம் ஆண்டு IBPN - Indian Business and Professional Network -க்கு ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த தொடக்கமாக அமைந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட அதன் பிரதான குழுவினர், ஜெத்தாவில் உள்ள இந்தியத் துணை தூதர் ஃபஹ்த் அஹ்மத் கான் சூரியைச் சந்தித்தனர். புத்தாண்டின் முதல் நாளில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, நல்லெண்ணம், நோக்கம், நம்பிக்கை ஆகியவற்றால் நிரம்பியிருந்தது. இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தி, புதிய வாய்ப்புகள், ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்க வேண்டும் என்ற கூட்டு நோக்கத்தை இது வலுப்படுத்தியது.


புதுப்பித்த ஆற்றலுடனும் ஒன்றுபட்ட அர்ப்பணிப்புடனும், இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க உறுதி செய்து கொண்டு IBPN 2026 ஆம் ஆண்டிற்குள் நகர்கிறது.


IBPN தலைவர் அசீஸுர்ரப், 2026க்கான வலையமைப்பின் தூரநோக்கு மற்றும் செயல்திட்ட வடிவத்தை வெளியிட்டார். அவர் புதிய குழுவை மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி, ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் அறிவு பகிர்வு போன்ற தளங்கள் மூலம் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது என்பது IBPN இன் பணி என்பதை மீண்டும் வலியுறுத்தினார். எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகள் இந்தச் செயற்திட்டம் வழிவகுக்கும் என்று எடுத்துரைத்தார்.


இந்தியத் துணை தூதர் ஃபஹ்த் அஹ்மத் கான் சூரி, IBPN இன் முயற்சிகளை பாராட்டி, நிறுவன உறுப்பினர்களை மேலும் விரிவுபடுத்த ஊக்கமூட்டும் வழிகாட்டுதலை வழங்கினார். ஆடை மற்றும் நெசவு, சுற்றுலா, திரைப்பட தயாரிப்பு மற்றும் பிற படைப்புத் துறைகள் உட்பட எதிர்கால ஒத்துழைப்பிற்கான பல நம்பிக்கையளிக்கும் துறைகள் அவர் சுட்டிக்காட்டினார். 2024-25ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 41.88 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக சாதனையின் மூலம் இந்தியா-சவுதி உறவை மேலும் பலப்படுத்துகின்றன.


IBPN இன் முக்கிய முயற்சியான India-Saudi Arabia Connect என்ற திட்டத்தின் இரண்டாவது பதிப்பு 2026 பிப்ரவரியில் நடைபெற உள்ள இந்த நிகழ்வு, வலுவான நெட்வொர்க் உருவாக்கம், அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மற்றும் பலத்த தொழில் வணிக ஒப்பந்தங்களை உருவாக்கும் தளமாகக் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


IBPN நிர்வாகிகள் ஜெத்தா இந்திய தூதரகத்தில் புதிதாக பதவியேற்ற ஹஜ் & வர்த்தக அதிகாரி ஸதஃப் சௌத்ரியை வரவேற்று, அவரது பணி காலம் சிறப்பாக அமைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தெரிவித்தது கொண்டார்கள்.


- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us