/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் சுதந்திரதின விழா
/
பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் சுதந்திரதின விழா
பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் சுதந்திரதின விழா
பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் சுதந்திரதின விழா
ஆக 17, 2025

பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளை செவ்வனே செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், ஆக-15ல் அல்பா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ராங்க் ஃபோர்ஸ் எம். ஜி. சி. என்ற நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதியில் வைத்து இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொழிலாளர்கள் மத்தியில், பணிப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி மற்றும் முகம்மது சுல்தான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
விடுதியின் பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், முஸ்தஃபா, சண்முகம் ஆகியோருக்கு, அன்னை தமிழ் மன்றத்தின் தன்னார்வலர்கள் முகம்மது, ராஜாங்கம் மற்றும் அமிருதீன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, உணவு, பழங்கள் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டன.
- நமது பஹ்ரைன் செய்தியாளர், பெ. கார்த்திகேயன்.
Advertisement